பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.02.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண்:813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
பொருள்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்."
பழமொழி :
"A light heart lives long.
மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது."
இரண்டொழுக்க பண்புகள் :
*மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.
* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.
பொன்மொழி :
ஒரு செயலை செய்யும் போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம் - ஐன்ஸ்டீன்.
பொது அறிவு :
1. எந்த உலோகத்தின் உப்புகள் சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன ?
வெள்ளி .
2.விண்வெளிக்கு முதல் முதலில் சென்ற பெண் நாயின் பெயர் என்ன ?
லைகா.
English words & meanings :
Pepper-மிளகு,
Poppy Seed-கச கசா
வேளாண்மையும் வாழ்வும் :
விவசாயம் சார்ந்த கால்நடை வளர்க்கும் பண்ணைகள் முயல் மசால், வேலிமசால் போன்ற தழைச் சத்தை வெளியிடும் கால்நடைத் தீவனப் பயிர்களைப் பயிரிடுவதாலும் மண்ணின் வளம் அதிகரிக்க உதவுகின்றன.
நீதிக்கதை
தன்வினை தன்னைச் சுடும்
அது ஒரு கடும் குளிர்கால காலைப்பொழுது காடு முழுவதும் பனி பெய்திருந்தது. எல்லா இடங்களுமே அடர்த்தியாக பெய்திருந்த பனியால் பளிச்சென்று வெண்மையாக காட்சியளித்தன. எல்லா பறவைகளும், விலங்குகளும் தம் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தன. எதற்குமே இறை கிடைக்கவில்லை பசியோடு இருந்தன. மேலும் வெளியே மிகக் குளிராக இருந்ததால் அவை உள்ளேயே முடங்கி கிடந்தன.
ஆனால் அவற்றுள் ஒரு பிராணிக்கு தூக்கமே வரவில்லை. அது ஒரு வெட்டுக்கிளி. அதிகமாக சத்தம் எழுப்பும் பிராணி அது. எல்லா உயிரினங்களுமே தூங்கிக் கொண்டிருந்ததால் அதற்கு பொழுது போகவில்லை. வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க அது விரும்பியது.
வெளியே வந்தவுடன் காடு முழுவதும் வெண்மையாக இருப்பதைக் கண்டது.
தூங்குபவர்களை எல்லாம் எழுப்ப எண்ணி, சத்தமாக பாடத் தொடங்கியது. தன் கால்களை ஒன்றோடு ஒன்று தேய்த்து பாட்டுக்கு தாளம் போட்டு உல்லாசமாக இருந்தது.
அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பொந்தில் ஓர் ஆந்தை வாழ்ந்து வந்தது. கடும் குளிராக இருந்ததால் இத்தனை நாட்களாக அது தூங்கிக் கொண்டிருந்தது. வெட்டுக்கிளியின் சத்தமான பாட்டை கேட்டு ஆந்தை கண் விழித்தது. “யார் இந்த சத்தமாக பாடும் பிராணி, என் குளிர்கால தூக்கத்துக்கு இடையூறாக இருப்பது?” என்று ஆந்தை தனக்குள் கேட்டுக் கொண்டது.
பொந்திலிருந்து தலையை நீட்டி ஆந்தை வெளியே பார்த்தது. அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தவாறு வெட்டுக்கிளி ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது. தன் தூக்கத்திற்கு இடையூறு செய்த வெட்டுக்கிளி மீது ஆந்தைக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
பாடிக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளியை சத்தமில்லாமல் ஆந்தை நெருங்கியது. தன்னுடைய அலகால் அந்த முட்டாள் வெட்டுக் கிளியை பிடித்தது.
எல்லா பிராணிகளைப் போல வெட்டுக்கிளியும் தன் இருப்பிடத்திலேயே குளிர்காலம் முழுவதும் இருந்திருந்தால் அனாவசியமாக பிடிபட்டு இருக்காது.
இன்றைய செய்திகள் : 12.02.2025
மாநிலச்செய்தி:
தமிழ் நாடு மின்வாரியத்துக்கு உள்ளாட்சி அமை ப்புகள், பிற அரசு துறைகள்
ரூ.7,351 கோடி மின்கட்டண பாக்கி
உள் நாட்டுசெய்தி:
முதல்வர் பிநரன்சிங் ராஜினா மா மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி
உலக செய்தி:
மெக்சிகோ வளைகுடா வை அமெ ரிக்க வளைகுடா’ என பெயர் மாற்றிய
டிரம்ப்: விமானத்தில் பறந்து கொண்டே உத்தரவு.
விளையாட்டுச் செய்தி:
ஏபிஎன் ஆம்நரா டென்னிஸ் அல்காரஸ் சாம்பியன்: ஆஸ்திரேலிய வீரரை
வென்றார்.
Today's News: 12.02.2025
State News:
Local bodies, other government departments owe Tamil Nadu Electricity Board Rs. 7,351 crore in electricity bills
Domestic News:
Chief Minister Pinarayi Singh resigns, President's rule in Manipur
World News:
Trump renames Gulf of Mexico as 'Gulf of America': Orders while flying in plane.
Sports News:
ABN Amnara Tennis Alcaraz Champion: Beats Australian player
.