Songs

Friday, March 7, 2025

07-03-225 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.03-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :சூது

 குறள் எண்:935


கவறும் கழகமும் கையும் தருக்கி

 இவறியார் இல்லாகி யார்.


பொருள்:சூதாடு

கருவியும். ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர்."


பழமொழி :

வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.   


A diamond must be cut with a diamond.


இரண்டொழுக்க பண்புகள் :  


  *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.


*தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.


பொன்மொழி :


வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை,  ஒன்று வெல்கிறார் அல்லது கற்கிறார் ---மகாத்மா காந்தி


பொது அறிவு : 


1. பிளாஸ்டிக் தயாரிப்பில் எந்த நாடு முதலிடம் வகிக்கிறது? 


விடை :  ஜெர்மனி.    


2. மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் யார்?  


விடை: நிக்கோலா டெஸ்லா 


English words & meanings :


 Cooking.  -   சமைத்தல்


Dancing.   -    நடனம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 உட்செலுத்தும் பொருட்களுக்கான செலவு குறைவதாலும், நுகர்வோர் கரிமப் பொருட்களுக்காக கொடுக்கும் கூடுதல் விலையாலும், கரிம விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கப் பெறுகிறது


நீதிக்கதை


 சிட்டுக்குருவியும் காகமும் 


ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.


அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது.


அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.


இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு கொண்டு பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்து  சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது. 


 நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை  கேட்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 07.03.2025

* ரூ.274 கோடியில் ஒன்றரை ஆண்டாக நடந்துவந்த எழும்பூர் - கடற்கரை 4-வது பாதை பணி நிறைவு: விரைவில் சோதனை ஓட்டம்.

* நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளால் 2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல் - நீதிபதி அதிருப்தி.

* மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 4.1 அலகுகளாக பதிவானது.

* பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை.

* ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் பிரனாய் தொடக்க சுற்றில் வெற்றி.


Today's Headlines

* Chennai's Ezhumbur - Marina 4th line project completed at a cost of ₹274 crores; trial run soon.

* Court expresses dissatisfaction over non-compliance with its orders, says 550 contempt cases filed against officials in 2 months.

* Two earthquakes hit Manipur within an hour, measuring 5.7 and 4.1 on the Richter scale.

* ₹80,000 crore worth of gold reserves discovered in Pakistan's Sindh region.

* Indian chess players Praggnanandhaa and Aravindh lead in the Braintree Masters International Chess Tournament.

* Indian shuttler Pranav wins in the opening round of the Orleans Masters Badminton Tournament




Thursday, March 6, 2025

06-03-2025 பள்ளி பாலை வழிபாட்டு செயல்பாடுகள்

 -


06.03.2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: சான்றாண்மை

 குறள்எண்:983


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.


பொருள்:

அன்புடைமை. நாணம், பொதுநலம், இரக்கம், வாய்மை ஐந்தும் குனநிறைவு என்ற கட்டடத்தின் தூண்களாகும்.


பழமொழி :

செயல்கள் தேவை; சொற்களல்ல.


Wanted deeds only, not words.


இரண்டொழுக்க பண்புகள் :   


*  பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.                     


 *பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .


பொன்மொழி :


எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல, எவரும் எவருக்கும் மேலானவனும் அல்ல, மனிதர்கள் அனைவரும் சமம்.---தந்தை பெரியார்


பொது அறிவு 


1. உலகின் முதல் கணினி வைரஸை உருவாக்கிய நாடு எது? 


விடை:  பாகிஸ்தான்.    


2. இந்தியாவின் இளைய பிரதமர் யார்?


 விடை: ராஜீவ் காந்தி 


English words & meanings :


 Railway station.     -     தொடர்வண்டி நிலையம்


Zoo.      -    விலங்குகள் பூங்கா


வேளாண்மையும் வாழ்வும் : 


 விவசாய உற்பத்தியில் அதிகப்படியான நீர், கனமழை முதல் அதிகப்படியான நீர்ப்பாசனம் வரை, பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனைக் குறைக்கும், அத்துடன் கட்டிடங்கள்/கட்டமைப்புகளை சேதப்படுத்தும்


மார்ச் 06 இன்று


வலந்தீனா விளாடிமீரொவ்னா தெரெசுக்கோவா அவர்களின் பிறந்தநாள்


நீதிக்கதை


 நாளைய உணவு


சில வெள்ளாடுகளும், செம்ம்றி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, “என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. 


அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதிர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும்” என்றது.


அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம்” என்றது காட்டமாய்.இந்தக்காலத்தில் நல்லதைச் சொன்னால் யார்த்தான் கேட்கிறார்கள்...என நொந்தபடியே தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது வெள்ளாடு.


சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில்  ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? அனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன.


வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.


‘அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...?’ என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன.


‘இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம்’ என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன




இன்றைய செய்திகள் - 06.03.2025


* வரும் கோடைக்காலத்தில் தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.


* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


* இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது.


* இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார்.


* ICC சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.


Today's Headlines


* India's daily electricity demand is expected to increase to 22,000 megawatts this summer, a 10% rise from last year.¹


* The Tamil Nadu government has allocated ₹265 crores as a short-term loan to transport corporations to provide pension benefits to retired transport employees.


* India has seen a significant surge in visa applications, with over 67.5 lakh applications received in 2024 alone.


* The United States has announced plans to impose reciprocal tax rates on several countries, including India, China, Brazil, Mexico, and Canada, starting from April 2


* ICC Champions Trophy: New Zealand, defeated South Africa by 50 runs, will play with  India in the final



Tuesday, March 4, 2025

05-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : சூது

குறள் எண்:931


வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்

தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.


பொருள்:வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.


பழமொழி :

Better one word in time than two afterward.


வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் மேற்கொள்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன். 


*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.


பொன்மொழி :


உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும் --- அரிஸ்டாட்டில்


பொது அறிவு : 


1. இந்திய விண்வெளி மையம் இஸ்ரோ அமைந்துள்ள இடம் எது?


விடை: பெங்களூரு


2. பாம்பின் நுரையீரல்களின் எண்ணிக்கை என்ன?


விடை: 1


English words & meanings :


 Stress     -    அழுத்தம்


 Suffering     -     துன்பம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 கரிம வேளாண்மைக்கு தொழிலாளிகள் மற்றும் அறிவுத் திறன் ஆகிய இரண்டும் மிக அதிக அளவில் தேவைப்படும்..


நீதிக்கதை

ஒட்டகங்கள்


ஒருவர் குருவிடம் சென்று, "ஓடிக்கொண்டே இருக்கிறேன் பல பிரச்சனைகள். வீட்டில்,வேலை செய்யும் இடத்தில், கிராமத்தில் என்று எங்கு சென்றாலும் பிரச்சனைகள் தான். என்னால் நிம்மதியாக தூங்கவே இயலவில்லை. எனக்கு தீர்வை சொல்லுங்கள்" என்று  முறையிட்டார்.


அப்போது மாலை நேரம்.குரு அவரிடம் தோட்டத்திற்குச் சென்று "ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று பார்த்து வா. அதன் பின் உனக்கு தீர்வை சொல்கிறேன்" என்றார்.


சென்றவர் திரும்பி வந்து "நூறு ஒட்டகங்களும் நின்று கொண்டு தான் இருக்கின்றன" என்று கூறினான். "நல்லது. நீ சென்று நூறு ஒட்டகங்களும் படுத்தபின் அங்கு இருக்கும் ஓய்வறையில் தூங்கிவிட்டு,காலையில் வந்து என்னை பார்" என்று குரு கூறினார்.


" சரி குருவே", என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றவர்,சிறிதும் தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலையில் வந்து  குருவிடம் "ஐயா இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை" என்று கூறினார்.


" என்ன ஆச்சு? " என்றார் குரு. அதற்கு அவர்,"சில ஒட்டகங்கள் தானாகவே படுத்துக் கொண்டன.சில ஒட்டகங்களை மெனக்கெட்டு நான் படுக்க வைத்தேன். சில ஒட்டகங்கள் படுக்கும் பொழுது வேறு சில ஒட்டகங்கள் எழுந்து கொண்டன. ஆக மொத்தத்தில் எல்லா ஒட்டகங்களையும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க இயலவில்லை. அதனால் நான் தூங்குவதற்கு செல்லவே இல்லை" என்று கூறினார்.


குரு சிரித்துக்கொண்டே, "இதுதான் வாழ்க்கை. பிரச்சினைகளை முடிப்பது என்பது ஒட்டகங்களை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாகவே முடிந்து விடும். சில பிரச்சனைகளுக்கு


நாம் தீர்வு காணலாம். சில பிரச்சனைகளை முடிக்கும் போது வேறு சில பிரச்சினைகள் தோன்றும். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால் தான் தூங்க முடியும் என்றால் இந்த உலகத்தில் எவராலும் தூங்க இயலாது.


தீர்க்க முடிந்த பிரச்சனைகளை தீர்த்து விட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு, உங்களுக்கான ஓய்வறையில்  நிம்மதியாக தூங்குங்கள்" என்றார்.


சில நாட்கள் கழித்து, திரும்பி வந்து குருவிடம் அவர், "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான்  நிம்மதியாக இருக்கிறேன்" என்று கூறினார்


.




02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...