Songs

Sunday, March 16, 2025

17-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -     17-03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்:மருந்து

 குறள் எண்:947


 தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்

 நோயளவு இன்றிப் படும்.


பொருள்: செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும்.


பழமொழி :

அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.


Authority shows the man


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     


  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :


இளமையில் கல்வியை புறக்கனித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இழந்தவன் ஆகிறான்


பொது அறிவு : 


1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது? 


 ஆர்க்டிக் என்னும் கடற்பறவை. 


2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது ? 


 சொர்க்கப் பறவை.


English words & meanings :


 Martial arts.   -    தற்காப்புக் கலை


 Running.         -      ஓடுதல்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நிலத்தடி நீரை எடுத்து உபயோகப் படுத்திய அளவுக்கு நீரை சேமிக்க அல்லது சிக்கனமாக செலவழிக்க முன்வரவில்லை. விளைவு உலக அளவில் பரவலாக நீர் தட்டுப் பாரடு ஏற்பட்டது



நீதிக்கதை

 ஒரு ரூபாய்


முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு ரூபாய் காசு கீழே கிடந்தது. அவர் அந்த ரூபாயை  ஒரு ஏழைக்கு கொடுக்க நினைத்தார். 


அவர் போகும் வழியில் அவரால் எந்த ஏழையையுமே பார்க்க முடியவில்லை . அதனால் அந்த ரூபாயை அவரே பத்திரமாக வைத்துக்கொண்டார். அப்படியே இரண்டு நாட்கள் கடந்தது. ஒருநாள் முனிவர், அவரது வீட்டை விட்டு வெளியே வரும் போது ஒரு ராஜா பேராசையோடு ராணுவத்துடன் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட சென்று கொண்டு இருந்தார். 


அப்போது அந்த ராஜா முனிவரை பார்த்ததும் தான் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட போவதாகக்  கூறி அவரிடம் தான் வெற்றி பெற ஆசீர்வாதம் கேட்டார். ராஜா அவ்வாறு கேட்ட பின் முனிவர் சிறிது நேரம் யோசித்து, ராஜாவுக்கு அந்த ஒரு ரூபாயை கொடுத்தார். 


உடனே ராஜாவுக்குக் கோபம் வந்தது. ராஜா முனிவரை பார்த்து “எனக்கு எதுக்கு ஒரு ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார். முனிவர்  “நான் நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் இந்த ஒரு ரூபாயை பார்த்தேன்.  இதை ஒரு ஏழைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன்.ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் ஒரு ஏழையைக் கூட இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக கண்டுபிடித்துவிட்டேன்" என்றார்.


அதற்கு ராஜா “நான்  பணக்காரன் என்னிடம் நிறைய பணமும், நிலங்களும் இருக்கிறது . ஆனால் நீங்கள் என்னை ஏன் ஏழை என்று கூறினீர்?” என்று கேட்டார். 


அப்போது முனிவர்  “உன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், பேராசையுடன் இன்னொரு நாட்டை கைப்பற்ற போகிறாய்.


உன்னை விட ஒரு ஏழையை என்னால் பார்க்க முடியாது. அதனால்   தான் உனக்கு இந்த ஒரு ரூபாயை கொடுத்தேன்”  என்றார். 


ராஜா தன்னுடைய தவறை உணர்ந்து தான் பேராசை மனதை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு முனிவரிடம் மன்னிப்பு கேட்டார்


ன்றைய செய்திகள்

17.03.2025

-  அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

-  விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன் வழங்கப்படும்: தமிழக வேளாண் பட்ஜெட்டில் தகவல்.

-  யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

-  செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோ உடன் செல்லும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

-  இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

-  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: 'பிளே-ஆப்' சுற்று 29-ந் தேதி தொடக்கம்.

Today's Headlines

- The school department has ordered the submission of the headmasters who will be retired in May .

-  Farmers will be given a loan of Rs 17,000 crore crop: Tamil Nadu Agricultural Budget

-  There are 6 new Indian historical symbols added to the proposed list of UNESCO traditional recognition.

-  Elon Musk's Space X spacecraft that goes with the Humanoid Robot to Mars.

-  Indianwells Open International Tennis Tournament

-  ISL Football Series: 'Play-Off' round starting on 29th


Thursday, March 13, 2025

14-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம்:மருந்து

குறள் எண் :944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல

துய்க்க துவரப் பசித்து.


பொருள்:


முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறு பாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ண வேண்டும்.


பழமொழி :

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்


Face the danger boldly than live in fear.


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     


  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :


ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்---சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு : 


1. குழந்தைகள் உதவி எண் என்ன? 


விடை : 1098.          


2. இறந்த பிறகும் உடலில் எந்தப் பகுதி வளரும்? 


விடை: விரல் நகம்


English words & meanings :


 Climbing.       -      ஏறுதல்


 Cricket.          -    மட்டைப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் : 


 நல்ல நீரில் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிது அதிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனி ஆறுகளில் உறைந்திருக்கும்

நீதிக்கதை


 பூனையின் புதையல் வேட்டை 


முன்னொரு காலத்தில் ஒரு பங்களாவில் பூனை ஒன்று வசித்து வந்தது. அது ஆயிரக்கணக்கான எலிகளை அடிமைத்தனம் செய்து வந்தது. எலிகளை பயன்படுத்தி அந்த கிராமத்திலுள்ள மக்களிடமிருந்து பணம், தங்க காசுகள் ஆகியவற்றை திருட செய்தது.


எலிகள் அனைத்தும் பூனையின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். அதனால் இந்த பூனைக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும், என்று எலிகள் அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டனர். அப்போது புஜி என்கிற எலி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லி ஒரு வரைபடத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வந்தது.


புஜி தன் திட்டத்தை மற்ற எலிகளிடம் சொன்னது. மற்ற எலிகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தன. அவர்கள் பூனையிடம் சென்று, “பூனை ராஜா எங்களிடம் ஒரு வரைபடம் உள்ளது. அந்த வரைபடத்தை பின்பற்றினால் நாம்  பெரிய புதையலை கண்டுபிடிக்க முடியும்” என்று சொன்னார்கள்.


அந்தப் பூனை எலிகளிடம் இருந்து அந்த வரைபடத்தை வாங்கிக்கொண்டு, “நானே சென்று இந்த புதையலைக் கண்டு பிடிக்கிறேன். உங்களுடைய உதவி எனக்கு தேவை இல்லை” என்று சொன்னது.


அந்தப் பூனை வரைபடத்தை பின்பற்றி புதையலைத் தேடி சென்றது. நடந்து நடந்து மிகவும் சோர்வுற்றது அந்தப் பூனை. ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தது, இந்த எலிகள் பூனைக்கு தெரியாமல் அதன் பின் சென்றனர்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது அந்த பூனை. அந்த வரைபடத்தின் படி இடத்தை அடைந்த பூனை, அங்கே குழி தோண்ட ஆரம்பித்தது. எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இருந்தும் அந்தப் பூனை தோண்டிக் கொண்டே சென்றது. அப்போது மிகவும் ஆழமாகத் தோண்டியதால் அந்தப் பூனையால் வெளியே வர முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டது.


உதவிக்காக அந்தப்  பூனை சத்தமிட்டு கொண்டு இருந்தது. அப்போது எலிகள் அனைத்தும் அந்த குழியின் மேல் இருந்து எட்டி பார்த்தன. அந்தப் பூனை எலிகளிடம் உதவி கேட்டது.  அதற்கு அந்த எலிகள், இது உனக்கு தேவதை கொடுத்த புதையல் இதை விட்டு வெளிய வரவே முடியாது” என்று சொன்னார்கள்.


பின்னர் கிராமத்திற்கு திரும்பி சென்று தாங்கள் திருடிய அனைத்து காசுகள் மற்றும் நகைகளை திருப்பி அந்த கிராம மக்களிடம் கொண்டு ஒப்படைத்தனர். கிராம மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் எலிகளை பாராட்டினார்கள்.



இன்றைய செய்திகள் - 14.03.2025


* தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு.


* தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்.


* 3.14 கோடி கணக்குகளுடன் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதலிடம்: தலைமை அஞ்சல்துறை தலைவர் பெருமிதம்.


* மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


* சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான் ’’ என அமெரிக்கா கூறியுள்ளது.


* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் ரோஹித்துக்கு 3-வது இடம்.


* தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டி: ஜார்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது




Wednesday, March 12, 2025

13-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :942


மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.


பழமொழி :

Many hands make work light\


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


இரண்டொழுக்க பண்புகள் :  


   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.  


*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.


பொன்மொழி :


எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். - ஆபிரகாம் லிங்கன்


பொது அறிவு : 


1. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்? 


விடை: ரோமானியர்கள். 


2. முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்த நாடு எது?


 விடை: நியூசிலாந்து


English words & meanings :


 Archery      -      வில்வித்தை


 Badminton       -      பூப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் : 


 இந்த பருவத்தில் நாம் வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர் வளங்கள், அதை சேமிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்


நீதிக்கதை


 நரியும் புலியும் 


ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி பார்த்துக் கொண்டு இருந்தது.


அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.


அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னை பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில், கொல்லனிடம் சென்று நரி “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்கக் காய வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான். 


முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம், “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல்" என்றான்.


நரியும்  வண்ணம் பூசுபவரிடம் சென்று “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது  வண்ணம் பூசு" என்றது.  அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினார்.


அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது.  நரி தனக்குள்  “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்றது.புலியை போல்  சத்தமிட முயற்சித்தது.ஆனால் முடியவில்லை. 


வித்தியாசமான சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.  ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயிற்று. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.


 நீதி:  பிறரை போல் இல்லாமல், நாம் நாமாக இருப்பதே நல்லது.

இன்றைய செய்திகள்

13.03.2025

* மின் இணைப்புகளில் பொருத்துவதற்காக ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

* “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி; அமெரிக்காவின்கோகோ காப் 4-வது சுற்றுக்கு தகுதி.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதிபெறாததால் ரூ.38 கோடி வருவாய் இழப்பு.

Today's Headlines

1. Tamil Nadu Electricity Board tenders for 3.04 crore smart meters worth ₹20,000 crores.

2. Chennai Weather Research Centre predicts moderate rain in Tamil Nadu, Puducherry, and Karaikal from March 13 to 18.

3. India and Mauritius sign 8 Memoranda of Understanding .

4. US President Donald Trump says Ukraine is ready for a temporary ceasefire and hopes Russian President Putin will agree.

5. American tennis player Coco Gauff qualifies for the 4th round of the Indian Wells International Tennis Tournament.

6. India misses out on the World Test Championship, incurring a revenue loss of ₹38 crores


02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...