Songs

Wednesday, March 19, 2025

20-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


- 20.03.2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம்:மருந்து

குறள் எண்:950


உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று

அப்பால்நாற் கூற்றே மருந்து.


பொருள்:

நோயாளி, மருத்துவன், மருந்து, துணையாளி என்ற இந்நான்கும் மருத்துவத்தின் கூறுகள்.


பழமொழி :

சமர்த்தனுக்கு ஏதும் பெரிதல்ல.       


Nothing is too great for a clever man.


இரண்டொழுக்க பண்புகள் :   


*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.    


*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு  விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.


பொன்மொழி :


படைப்பாற்றலின் கதவை திறக்கக்கூடிய சாவி கல்வி --அகதா கிறிஸ்டி


பொது அறிவு : 


"1. கார்பன் மோனாக்சைடும் ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்?


விடை: நீர்வாயு              


2. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: கவிக்குயில் சரோஜினி நாயுடு "


English words & meanings :


 Drums    -      மேளம்

 

Joke       -      நகைச்சுவை


வேளாண்மையும் வாழ்வும் : 


 எதிர்கால உணவுத் தேவைகளைச் சமாளிப்பதற்கான உலகின் திறனைப் பொருத்த விஷயத்தில், பெரும் கவலையளிக்கக்கூடிய இரு தடைகள் நிலமும் தண்ணீரும்தான்

நீதிக்கதை

 கருத்துடன் செயல்படு


ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். 


அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்து போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால்பக்கங்கள் உதிரத் தொடங்கின.


அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோமுறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.


அந்தப் பத்தியில் கருங்கடல் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக்கண்டு கொள்வது என்றும், அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டு இருந்தது.தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக்கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.


இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரையை நோக்கி உடனேபுறப்பட்டான்.


அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான்.


கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.


பல மாதங்களும்,  வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.


ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால்,எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.


நீதி:செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.



இன்றைய செய்திகள் - 20.03.2025


* சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாநகராட்சிக்கு உட்பட்ட 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மேயர் பிரியா அறிவிப்பு.


* வெம்பக்கோட்டை அகழாய்வில் 87 செ.மீ. ஆழத்தில் பதக்கம், இரும்பு கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்


 தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* கடந்த 10 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


* அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.


* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் இஷாராணி பரூவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


* ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.


Today's Headlines


* Chennai Corporation Budget: Mayor Priya has announced that the book reading zones with a roof facility will be set up at an estimated cost of Rs. Two crore 


 * In the excavation of Vembakkottai at the depth of 87 cm Iron Medal is   Discovered: Minister Thangam Thennarasu Informated.


* The Chennai Meteorological Department said that there is a chance of mild rains in Tamil Nadu till March 22.


* The central government has said that the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme is being implemented in the last 10 years.


* US -based Nick Hague, Sunita Williams, Pear Wilmore and Russia Alexander returned to Earth on a Dragon spacecraft of SpaceX.


* Swiss Open Badminton Tournament: India's Isharani Barua won and advanced to the next round.


* IPL Cricket: Tickets for Chennai - Mumbai Tickets have been sold in an hour





Tuesday, March 18, 2025

19-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


ள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 

19-03-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: மருந்து 

குறள் எண்:949


உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்

 கற்றான் கருதிச் செயல்.


பொருள்:

நோயாளிகள் நிலையையும், நோயின் நிலையையும் காலத்தையும் மருத்துவன் அறிந்து செய்க."


பழமொழி :

"சுறுசுறுப்பு வெற்றி தரும்.


. Briskness will bring success."


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     


  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :


எதிர்காலத்தைப்  பற்றி பயம் கொள்ள வேண்டாம். அதை உருவாக்கத்தான் இப்போது வாழ்ந்து  கொண்டிருக்கிறோம் --பராக் ஓபாமா


பொது அறிவு 


1. அதிக வெப்பக் கதிர்வீச்சை உட்கவரக்கூடிய நிறம்__________ 


விடை : கறுப்பு.               


2.இராக்கெட்டின் இயக்கம் செயல்படுவது நியூட்டனின் எந்த விதியின் படி_____________


விடை :மூன்றாம் விதி


English words & meanings :


 Walking.          -      நடத்தல்

  Wrestling.       -       மல்யுத்தம்



நீதிக்கதை

 சிங்கமும் சிலையும் 

ராமுவும், சிங்கமும் நண்பர்கள்.

ஒரு நாள் ராமு தன்னுடன் சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது.

''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு.

''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலையை செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.

நீதி:  தனக்கென்றால் தனிவழக்குதான்

இன்றைய செய்திகள்

19.03.2025

*Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' - முதல்வர் ஸ்டாலின்

*உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

*சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் 9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி  நிலையத்திலிருந்து பூமிக்கு 
 மார்ச் 19  இன்று காலை திரும்பினர்.

*சந்திரயான் 5 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரயான் 5 மிஷனை ஜப்பானின் ஜாக்ஸாவுடன் இணைந்து இஸ்ரோ செயல்படுத்த உள்ளதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

*ஐபிஎல் 2025 தொடர் வரும் சனிக்கிழமை (மார்ச் 22) அன்று கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது. வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெறும்.

Today's Headlines

*Trek tamilnadu: `Rs 63.43 lakh in 3 months; Meaningful Travel ' - CM Stalin

*The summer festival for the current year in Nilgiris, which is attracted to tourists globally, is underway. 

*Sunita Williams and Patch Wilmore 9 months later from the International Space Station to Earth 
 They are returning March 19.

*ISRO leader Narayanan has said that the central government has given permission to implement the Chandrayaan 5 project. Narayanan also said that ISRO will be implementing Chandrayaan 5 mission with Japan's Jacksa.

*The IPL 2025 series is set to begin on Saturday (March 22) in Kolkata. It will be held until May 25

Monday, March 17, 2025

18-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: மருந்து

 குறள் எண்:948


 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

 வாய்நாடி வாய்ப்பச் செயல்.


பொருள்: நோய் இன்னதென்றும், அதன் காரணத்தையும் போக்கும் வழியையும் அறிந்து பிழையரப் போக்க வேண்டும்.


பழமொழி :

சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.


A man is affected by his environment.


இரண்டொழுக்க பண்புகள் :   


 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     


  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :


தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ,அதுவே உண்மையான கல்வி --சுவாமி விவேகானந்தர் 


பொது அறிவு : 


1. இமயமலைச் சரிவுகளில் காணப்படும் காடுகள் ____________ 


விடை: இலையுதிர் காடுகள் 


2.ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்________


 விடை : செம்மண் 


English words & meanings :


 Shooting.     -       சுடுதல்


Volleyball.       -     கைப்பந்து

நீதிக்கதை

 காகமும் அன்னப்பறவையும் 


ஒரு குளத்தின் அருகில் காகம் வசித்து வந்தது. அதற்கும் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் அன்னப்பறவையும் வசித்து வந்தது. அந்த அன்னப்பறவை மணிக்கணக்கில் அந்தக் குளத்தில் நீந்திக் கொண்டே இருக்கும்.


காகத்திற்கு எப்போதுமே தன் நிறத்தை பார்த்து வருத்தமாக இருந்தது. அன்னப்பறவையின் நிறத்தை பார்க்கும் போது காக்கைக்கு பொறாமையாக இருந்தது. ஒருநாள் அந்த அன்னப்பறவையின் நிறத்தை பார்த்துக்கொண்டு காகம், “எனக்கும் இதுபோல் நிறம் வேண்டும்” என்று ஆசைப்பட்டது.


“இந்த அன்னப் பறவைக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகும் வெள்ளை நிறமும் உள்ளது” என்று காகம் யோசித்தது. “ஒருவேளை அந்தப் பறவை எப்போதும் தண்ணீரில் இருப்பதாலும், பல முறை குளிப்பதாலும் தான் வெள்ளையாக இருக்கிறதோ“என்று நினைத்தது.


காகமும், “இனிமேல் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை குளிக்க வேண்டும்” என்று  தீர்மானித்தது. அப்படி செய்தால் தானும் அழகாகவும், வெள்ளையாகவும் மாறிவிடலாம் என்று ஆசைப்பட்டது. அந்த ஆசையில் அழகாக மாறும் தன்னுடைய பயிற்சியை காகம் ஆரம்பித்தது.


காகத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அன்னப்பறவையும் மற்ற பறவைகளும் காத்திருந்தன. பலமுறை குளித்த பிறகும் காகத்தின் தோற்றத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இருந்தும் காகம் தன் முயற்சியை கைவிட தயாராக இல்லை. ஒரு நாளில் காகம் பலமுறை குளித்தது.


கடைசியில் ஒரு நாள் காகம் காய்ச்சலில் விழுந்தது. அதிலிருந்து நலம் பெற்று வர மிகவும் கஷ்டப்பட்டது.  அப்போதுதான் காகம் தன்னுடைய தவறை புரிந்துகொண்டது. தன் முயற்சியை கைவிட்டு, “நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருக்க பழகிக் கொள்ள வேண்டும்” என்று நினைத்தது. மனதில் அந்த மாற்றம் வந்தபின் காகம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் பறவையாக மாறியது.


நீதி : நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதில் சந்தோஷப்பட வேண்டும்.


இன்றைய செய்திகள்

18.03.2025

* இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

* குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்.

* போலி பாஸ்போர்ட், விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை: மக்களவையில் புதிய குடியுரிமை மசோதா தாக்கல்.

* இந்தியா - நியூசிலாந்து இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.

* ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: தென்கொரிய வீராங்கனை அன்சே யங் சாம்பியன் பட்டம் வென்றார்.

* இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டனின் ஜேக் டிராப்பர்.

Today's Headlines

* In the Indian Army, applications are invited for Agniveer jobs. You can apply for any two categories simultaneously based on merit.

* Group-1, Group-4 Examination announcements will be released in April: DNBSC President SK Prabhakar Information

* Seven years in prison for fake passport, visa fraud: filed a new citizenship bill in Lok Sabha.

* A Defense Agreement is signed between India and New Zealand.

* In All India badminton tournament South Korean player  Anse-young won the championship

Indianwells Open International Tennis Tournament: Britain's Jack Dropper won the championship







02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...