பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.03.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: குடிமை
குறள் எண்:952
ஒழுக்கமும் வாய்மையும் காணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
பொருள்:
உயர்குடி பிறந்தார், ஒழுக்கம், உண்மை, மானத்திற்கு அஞ்சுதல் ஆகியவற்றில் நிலை தவற மாட்டார்கள்.
பழமொழி :
சிங்கத்துக்கு பங்கம் இல்லை.
A lion knows no danger.
இரண்டொழுக்க பண்புகள் :
*உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.
*விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன்.
பொன்மொழி :
எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும், அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ,எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும் ---அறிஞர் அண்ணா
பொது அறிவு :
1. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
விடை:உத்திரப்பிரதேசம்.
2 நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?
விடை: அம்மோனியம் நைட்ரேட்
English words & meanings :
Play. - நாடகம்
Poem. - கவிதை
வேளாண்மையும் வாழ்வும் :
ஆசியாவில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொழில்மயமாதல் காரண மாக நகர்களின் எல்லை விரிவடைவதால் விளைநிலங்கள் இழக்கப்படுகின்றன, நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
நீதிக்கதை
கை மேல் பலன் கிடைத்தது !
அரசன் ஒருவர் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கையை வைத்து தினமும் ஏதாவது ஒரு சகுனம் நல்லது என்று கூறி தனது புகழை நிலைநாட்டுவார்.
ஒரு நாள் இப்படித்தான்'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்தான்காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.
ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றார்.
அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும்.
மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினார்.
சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான்மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன்கிடைத்து விட்டது அல்லவா?'என்றான்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. தனது தவற்றை புரிந்து கொண்டார்.சேவகனை பாராட்டி அனுப்பினார்.
*இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.03.2025*
📰 சென்னையில் இன்று கூடுகிறது தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம். முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வருகையால் தேசிய அளவில் கவனம் ஈர்க்கிறது தமிழ்நாடு.
📰 அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை ஒன்றிணைந்து முறியடிப்போம். சென்னை வந்துள்ள பல்வேறு மாநில கட்சித் தலைவர்கள் உறுதி.
📰 18-வது ஐ.பி.எல். போட்டிகள் கொல்கத்தாவில் இன்று கோலாகல தொடக்கம். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.
Today's Headlines | 22.03.2025*
📰 A joint action committee meeting against constituency realignment is being held in Chennai today. Tamil Nadu is attracting national attention with the arrival of Chief Ministers and party leaders.
📰 Let's unite to defeat the constituency realignment plan that is against basic democracy. Various state party leaders who have come to Chennai have confirmed their presence.
📰 The 18th IPL. The matches will start in Kolkata today with a bang. Spectacular performances will be organized at the Eden Gardens stadium in Kolkata.