Songs

Wednesday, March 26, 2025

27-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்: 959


நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.


பொருள்:

நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.


பழமொழி :

தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு. 


Defeat the defeat before the defeat defeats you.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்--- தந்தை பெரியார்


பொது அறிவு : 


1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?


மகாத்மா காந்தி மறைந்த தினம் .


2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.


English words & meanings :


 Hill      -     மலை

 

 Island         -     தீவு


வேளாண்மையும் வாழ்வும் : 


 நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.


நீதிக்கதை

 தலைமை அமைச்சர்


ஒரு அரசன் தன்  முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை  தலைமை  அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார்.அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில்  வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.


தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.


 மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர்  மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.


மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை. 


இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே  தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.


நீதி :  முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.



இன்றைய செய்திகள் - 27.03.2025


* அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


* கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.


* டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


* வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


* மியாமி ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Minister Rajagannappan said in the legislative session that there is a great demand for Aavin ghee in the United States.


* Rural Development Minister E. Periyasamy has announced that community health complexes will be built in rural areas at an estimated cost of Rs 3150 crore.


* It was reported in the Lok Sabha that 83,668 whatsup numbers and 3,962 Skype accounts have been crippled in connection with digital arrests.


* The US has announced that 25 per cent additional tax will be imposed on countries that import oil and gas from Venezuela.


* Miami Open tennis: Improvement of American player Taylor Britz quarterfinals




Tuesday, March 25, 2025

26-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: குடிமை 

குறள் எண் :958


 நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்

 குலத்தின்கண் ஐயப் படும்.


பொருள்:

குடிநலனில் விருப்பமில்லாதிருப்பின், அவன் குலப் பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவார்.


பழமொழி :

சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.  


Learning the future by looking at things past.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் --சுபாஷ் சந்திரபோஸ்


பொது அறிவு : 


1. முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது? 


விடை : உருகுவே         


  2. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?


 விடை :உதடு


English words & meanings :


 Field.    -     வயல்

 

 Forest.   -     காடு


வேளாண்மையும் வாழ்வும் : 


  நீர் பற்றாக்குறை தீர நீர் வளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் முறையான நீர் மேலாண்மை, முக்கியமாக அனைத்து பயன்பாடுகளுக்கும் நீர் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

நீதிக்கதை


 அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து


ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும்.பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்துகொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.


ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்றுகட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது.


ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.


யோகி ஒரு நாள் பாம்புப்புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.


யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குபின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.



இன்றைய செய்திகள் - 26.03.2025


* ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்க பயணிகளுக்கு சிறப்பு பரிசு: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.


* தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.


* அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.


* நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு.


* கேலோ இந்தியா பாரா விளையாட்டு: பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்தனர் ஜாண்டு குமார் மற்றும் சீமா ரானி.


* 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதிச் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி தகுதி.


Today's Headlines


*  To encourage  online booking reservation scheme, The Tamil Nadu State Transport Corporation has announced  special lucky draw 


 * Toll Fees at 40 Toll Plazas in Tamil Nadu to be Increased from April 1st: National Highways Authority of India Announced.


 * Comprehensive Screening Centers to Detect All Types of Cancer to be Launched in All Districts of Tamil Nadu Within 10 Days: Minister Ma. Subramanian. This method is first in the Country.


 * India Urges at the United Nations that Pakistan Continues to Illegally Occupy the Jammu and Kashmir Region and Should Vacate it Immediately.


 * Earthquake in New Zealand: Recorded 6.7 on the Richter Scale.


 * Khelo India Para Games: Jaandu Kumar and Seema Rani Set National Records in Weightlifting.


 * 2026 World Cup Football: New Zealand Team Qualifies for the Qualifying Round




Monday, March 24, 2025

25-03-2025 அள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.03.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் 

அதிகாரம் குடிமை

குறள் எண்:957 


குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண மறுப்போல் உயர்ந்து.


பொருள்: விண்நிலவு களங்கம் போல், உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்.


பழமொழி :

செய்வன திருந்தச் செய்.  


Do well what you have to do.


இரண்டொழுக்க பண்புகள் :   


 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 


*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :


வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும்--அரிஸ்டாட்டில்


பொது அறிவு : 


1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது? 


விடை:  நெருஞ்சிப் பழம்.    


 2. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்______,________ 


விடை: அனிச்சம் , குவளை


English words & meanings :


 Dam.        -      அணை


Desert.      -     பாலைவனம்


வேளாண்மையும் வாழ்வும் : 


பல நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் உணவு தேவையை அதிகப் படுத்தி உள்ளது. விளைவு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்க வேண்டும்: அதற்கு நீர் தேவையும் அதிகரிக்கும்.


நீதிக்கதை

 கிணற்றைத்தானே விற்றேன்


ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.


அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.


விவசாயிக்குக் கோபம் வந்தது."எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.


விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.


விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.


நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால்கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.


விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.



இன்றைய செய்திகள் - 25.03.2025


* ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி, 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.


* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.


* ஒடிசாவில் தங்க படிமம் கண்டுபிடிப்பு: முதல் முறையாக படிமங்களை தோண்டி எடுக்க தங்க சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட உள்ளது.


* திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பார்முலா1 கார்பந்தயம்: 2-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்.


* மியாமி ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Construction of dams in 9 locations across 8 districts at a cost of ₹184.74 crore. Renovation, restoration, and reconstruction of 149 damaged irrigation systems in 35 districts announced byWater Resources Department Minister Duraimurugan


   * Government and private hospitals are instructed to investigate sudden deaths due to increased heat impact and report the details to the government.

 

   * Gold deposits discovered in Odisha: Gold mines will be auctioned for the first time for excavation.


   * The National Center for Seismology reported a 4.5 magnitude earthquake in Tibet.

 

   * Formula 1 car race: Australian driver Oscar Piastri topped the second round.


   * Miami Open Tennis: Serbian player Djokovic advanced to the 4th round



02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...