Songs

Sunday, January 26, 2025

27-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : வினைத்தூய்மை

குறள் எண்: 655


எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 

மற்றன்ன செய்யாமை நன்று.


பொருள்: பின்னாளில் நினைத்து வருத்தப்படத் தக்க செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவேளை தவறிச் செய்தாலும் மீண்டும் அத்தன்மையுடைய செயல்களைச் செய்யக் கூடாது.


பழமொழி :

தீய பண்பைத் திருத்தி நல்ல பண்பை பொலிவுறச் செய்யும் கல்வி. 


Education polishes good nature and corrects bad ones.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :


" கோழையும் முட்டாளுமே ' இது என் விதி ' என்பர், ஆற்றல் மிக்கவரோ 'என் விதியை நானே வகுப்பேன் ' என்பர்".----விவேகானந்தர்.


பொது அறிவு : 


1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


விடை: ஞானபீட விருது


2.ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?


விடை: சத்யஜித்ரே


English words & meanings :


 Mug-குவளை,


 Tub-தொட்டி


வேளாண்மையும் வாழ்வும் : 


18-வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன.



நீதிக்கதை: 


திருடன் மற்றும் விவசாயி

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் மொத்தம் பயிர்கள் வளர்த்து, மிகவும் உழைத்துக் கொண்டிருந்தார். அவ்வாறு உழைத்து கிடைத்த பயிர்களை வீட்டு அருகிலேயே அம்பாரத்தில் சேமித்து வைத்திருந்தார்.

ஒருநாள் இரவில், திருடன் ஒருவன் அம்பாரத்தில் கள்வியிட நினைத்தான். அப்போது விவசாயி விழித்துக் கொண்டு, அந்த திருடனை பிடிக்க முயன்றார். திருடன் தப்பிக்க முயற்சி செய்த போது, விவசாயி அவனை பிடித்து, "ஏன் இதைப் பண்றே? உன் வாழ்க்கை இதற்கு வேண்டுமா?" என கேட்டார்.

திருடன் சிரித்துக்கொண்டு, "எனக்கு சாப்பிட பசிக்கிறது. எனது பிழைப்பு இந்தப் பாவத்தில்தான் இருக்கிறது" என்றான்.

விவசாயி சொன்னார்: "நீ ஒரு பிழையாக உழைப்பதைப் போய் கள்வியால் வாழ்கிறாய். உன் உழைப்பில் கிடைத்த உணவின் சுவை உண்மையாக இருக்கும்."

அப்போதிருந்து, திருடன் கள்வியைக் கைவிட்டு, விவசாயியிடம் வேலைக்கு சேர்ந்தார். அவன் மாறிய வாழ்க்கை, அனைத்து கிராமத்தினருக்கும் முன்மாதிரியானது.

நீதி: உழைப்பால் வந்த வாழ்வு மட்டுமே நீண்ட நாள் நன்மை தரும்.







இன்றைய செய்திகள் - 27.01.2025


* சிறப்பாக பணியாற்றிய 2 ஐஜி-க்கள் உட்பட தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


* தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


   

* பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு: கடல்சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



* உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டம் வென்றார்.


Today's Headlines


* 23 people from the Tamil Nadu Police Department, including 2 IGs, have been awarded the President's Medal for their outstanding service.


* Tamil Nadu has emerged as the second-largest economic state in India, says Tamil Nadu Chief Minister M.K. Stalin.


* Indonesian President meets Prime Minister Modi: Various agreements including maritime security signed.


* The US government has decided to suspend funding for global aid programs.


* Australian Open Tennis: Italy's Gianni Cener wins the championship



Friday, January 24, 2025

25-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2025

திருக்குறள் 

பால் : அறத்துப்பால்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் எண்: 198


அரும்பயன் ஆயும் ஆறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.


பொருள் : சொல்லுக்கு ஆற்றலுண்டு, பயனுண்டு  என்று அறிந்த பெருமக்கள் நல்ல,உயர்ந்த பயன் தராத சொற்களைக் கூமாட்டார்கள். தம் மதிப்பைக் குன்றச் செய்யும் சொற்களை ஒரு போதும் கூறார் என்பது கருத்து."


பழமொழி :

கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.      


The roots of education is bitter, but the fruits are sweet.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :


"சரித்திரம் ஒரு முறை உன் பேரைச் சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும். இப்படிக்கு "" முயற்சி""."


பொது அறிவு : 


1. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது? 


சிலப்பதிகாரம்


2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? 


கேரளா


English words & meanings :


 Toothpaste-பற்பசை,


 Towel-துண்டு


வேளாண்மையும் வாழ்வும் : 


கரிம விவசாய இயக்கம் 1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஓர் எதிர்ப் போக்காக இது காணப்பட்டது.



ஆனால் நீங்களோ இவர் செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் நன்றியை மறந்து இவரை அடித்து விரட்டுகின்றீர்கள் என்று கூறியபடி கோபத்துடன் சுப்பையாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரை நல்லபடியாக உபசரித்தார் சத்திரத்துக் காவலாளி.


சுப்பையாவின் பசியெல்லாம் அடங்கிய பின்னர் சத்திரத்து காவலாளி “ஐயா! நானும் தங்களிடம் உதவி பெற்றள்ளேன். நீங்கள் கோயிலுக்கு வருகின்ற நேரமெல்லாம் உங்களை கவனித்திருக்கின்றேன்.


இன்றுதான் உங்களோடு பேசுகின்ற சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.உங்களோடு  பேசுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று கூறினார். அதனைக்கேட்ட சுப்பையா சிரித்தபடியே அந்தக் காவலாளியை நோக்கி,


“அப்பா என் பசியைப் போக்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.


நீதி:ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் வாழ வேண்டும். நன்றி உணர்ச்சியோடு வாழ்ந்தால் நன்மையே நடக்கும்.



இன்றைய செய்திகள் - 25.01.2025


* குடியரசு தின விழா: சென்னை​யில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை.


* இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்றும் நீட்டிக்கப்பட உள்ளது.


* இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது. மத்திய தேர்தல் ஆணையம் தகவல்.


* அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக உள்ளதாக  அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


* ஹாக்கி இந்தியா லீக்: ஐதராபாத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர்  ஜானிக் சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Republic Day: Drones banned in Chennai for 2 days


* For the convenience of the spectators coming to watch the India-England cricket match, the metro train service in Chennai will also be extended today.


* The number of voters in India is nearing 100 crores. Central Election Commission Information.


* Russian President Vladimir Putin is ready to talk to US President Donald Trump on the phone, the country's government has said.


* Hockey India League: Tamil Nadu Dragons beat Hyderabad.


* Australian Open Tennis: Italian Janic Ciner advances to final







Thursday, January 23, 2025

24-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 - 24-01-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் : நட்பு

குறள் எண்: 787


அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.


பொருள் : நண்பனை அழிவைத் தரும் தீமைகளிலிருந்து விலக்கி, நன்னெறியில் நடக்கச் செய்து,அவனுக்குத் துன்பம் வந்த போது அவனுடனிருந்து துன்பப்படுவதே நட்பு ஆகும்.            


பழமொழி :

கல்வியே நாட்டின் முதல் அரண்.  


  Education is the chief defence of a Nation.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .


பொன்மொழி :


ஒரு போதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டென்றால், அது நாம் செய்யும் நற்செயலே.---மேட்டர்லிங்க்


பொது அறிவு : 


1. ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி எது?


விடை:  பூமத்திய ரேகை மண்டலம்


2. அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது எது? 


விடை:  பட்டு நாண்


English words & meanings :


 Comb-சீப்பு,


 Scissors-கத்தரிக்கோல்


வேளாண்மையும் வாழ்வும் : 


செயற்கை அல்லது வேதியல் உரங்கள் உபயோகித்து செய்யப் படும் விவசாயம் அதிக மகசூல் தந்தாலும் இது அதிக அளவில் மண்ணையும் மனிதனையும் பாதிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக இயற்கை உரம் கொண்டு செய்யப் படும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற குரல் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது



நீதிக்கதை


 பருவத்தே பயிர்செய் 


பழனிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான்.


இதனைக் கவனித்த பழனியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான்.


மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.


அதனைக் கண்டு பழனியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.


சோம்பேறியான பழனி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.


அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.


அதனைப் பார்த்து பழனியால் பொறாமைப்படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம் இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.


இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்துச் செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.


நீதி:


பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல்,எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.



இன்றைய செய்திகள்


24.01.2025


* மயிலாடும்பாறை அகழ்வாய்வில் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு என்பது 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டறியப்பட்ட ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்


* பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அறிவிப்பு.


* பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.


* தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது.


* உலகப் பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டம்: ஏஐ சீர்திருத்தங்களுக்கு நாடுகளின் தலைவர்கள் அழைப்பு.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


* இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: லட்சயா சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Chief Minister Stalin released a research report that found that the use of iron in Tamil Nadu dates back 4,200 years in the Mayiladumbarai excavations


* Considering the importance of the biodiversity heritage site and the commitment of the Central Government under the leadership of Prime Minister Modi to protect traditional rights, the Union Ministry of Mines announced the cancellation of the tungsten mining auction.


* Strict punishment for sexual offences: Governor Ravi approves the amendment bill.


* The Union Cabinet meeting yesterday approved the continuation of the National Health Scheme for another 5 years and an increase in the minimum support price for jute.


* World Economic Forum Annual Meeting: Leaders call for AI reforms.


* Australian Open Tennis Tournament: Aryna Sabalenka advances to the final.


* Indonesia Masters Badminton Tournament: Lakshya Sen wins and advances to the next round.




Wednesday, January 22, 2025

23-01-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 

23-01-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:805


பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க

நோதக்க நட்டார் செயின்.


பொருள்:வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால், அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.


பழமொழி :

Caution is the parent of safety


முன்னெச்சரிக்கையே பாதுகாப்பிற்கு பிதா.


இரண்டொழுக்க பண்புகள் :  


1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுவேன். 


2. அவசியம் தேவை என்றால் மட்டுமே அதிக விலை கொடுத்து வாங்குவேன் .


பொன்மொழி :


மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான்.---சுவாமி விவேகானந்தர்.


பொது அறிவு : 


1.செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது எது? - 


விடை :டயலைசர்


2.சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு என்ன ? 


 விடை : 2 சதவீதம்


English words & meanings :


 Acid-அமிலம்


 Bucket-வாளி


வேளாண்மையும் வாழ்வும் : 


உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


23-01-25 இன்று


 தேசிய வலிமை தினம் ( நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் 2021 முதல்) இத்தினமாக கொண்டாடப்படுகிறது). 


ஜாவா நிரலாக்க மொழியின் (1996) முதல் பதிப்பு வெளியானது. 


கர்நாடக இசை வித்துவான் அரியக்குடி ராமானுஜம்  ஐயங்கார் (1967)  நினைவு தினம்.  


நாட்டுக்கென தனி கொடியை அமைத்தவரும், இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தியவரும், அதில் பெண்களுக்கு, தனி பிரிவை உண்டாக்கியவருமான, புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1809), முதன்முதலாக ஜப்பானுக்கு நோபல் பரிசு பெற்று தந்தவரான ஹிடேகி யுகாவா (1907),  ரபீந்திர பிரஸ்கார் விருது பெற்ற, இந்திய எழுத்தாளரான ஜோதிர்மயி தேவி ஆகியோரின் பிறந்த தினம்.




நீதிக்கதை


 நான்கு நண்பர்கள் 


முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர். 


 முதல் மூவரும் சிறந்த அறிவாளிகள்; பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், சிவானந்தன் உண்பதிலும் உறங்குவதிலுமே தன் பொழுதைக் கழித்து வந்தான். அவன் ஒரு முட்டாள் என்றே மற்றவர்கள் கருதினர். 


ஒரு முறை அந்தக் கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆறுகளும் ஏரிகளும் வற்றத் தொடங்கின. பயிர்கள் கருகின. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.


 உயிர் பிழைக்க அந்தக் கிராம மக்கள் மற்ற இடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். மற்றவர்களைப் போல் நாமும் வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும்  என்றான் சத்தியானந்தன். அவன் கூறியதை மற்ற நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். “சிவானந்தனை என்ன செய்வது?” என்று கேட்டான் சத்தியானந்தன். 


“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல வேண்டுமா ? அவனுக்குப் படிப்பும் இல்லை; எந்தத் திறமையும் இல்லையே” என்று தொடர்ந்து கூறினான் சத்தியானந்தன்.


“நம்முடன் அவனை அழைத்துச் செல்ல முடியாது. அவன் நமக்குச் சுமையாக இருப்பான்” என்று பதில் கூறினான் தர்மானந்தன். 


“அவனை இங்கேயே இருக்க விட்டு நாம் மட்டும் எப்படிச் செல்லமுடியும்? நம்முடன் வளர்ந்தவன் அவன். நாம் சம்பாதிப்பதை நம் நால்வரிடையே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்,” என்று வித்தியானந்தன் கூறினான். 


எனவே, சிவானந்தனைத் தம்முடன் அழைத்துச் செல்ல அவர்கள் தீர்மானித்தனர்.  அருகிலுள்ள நகரத்தை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் ஒரு காடு குறுக்கிட்டது. அதன் வழியே செல்லத் தொடங்கினர். 


ஓர் இடத்தில் ஒரு விலங்கின் எலும்புகளைக் கண்டனர். வியப்படைந்த அவர்கள் அவற்றை அருகில் சென்று பார்த்தனர். 


“இவை ஒரு சிங்கத்தின் எலும்புகளாகத்தான் இருக்க வேண்டும்” என்று வித்தியானந்தன் கூறியவுடன் மற்றரு மூவரும் அதை ஆமோதித்தனர். 


உடனே, ” நம்முடைய கல்வியறிவைப் பயன் படுத்துவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, ” என்று சத்தியானந்தன் கூறியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். 


“இந்த எலும்புகளை என்னால் ஒன்று சேர்க்க முடியும், ” என்று கூறியவாறே சத்தியானந்தன் அந்த எலும்புகளை ஒன்று சேர்த்துச் சிங்கத்தின் எலும்புக் கூட்டை உருவாக்கினான். 


“அதற்கு இரத்தமும் தசையும் என்னால் அளிக்க முடியும்” என்றான் தர்மானந்தன் அவனுடைய திறமையால் உயிரற்ற சிங்கத்தின் முழுமையான உடல் இப்போது அவர்கள் முன்னால் கிடந்தது.


“இந்தச் சிங்கத்தின் உடலுக்கு என்னால் உயிரூட்ட முடியும்” என்று துடிப்புடன் கூறினான் வித்தியானந்தன். 


உடனே முன்னால் ஓடி வந்து சிவானந்தன் அவனைத் தடுத்தான். “வேண்டாம், வேண்டாம். நீ ஒன்றும் செய்ய வேண்டாம்.நீ இந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினால் இது நம்மைக் கொன்றுவிடும், என்று கூறியவாறே அவனைத் தடுக்க முயன்றான் சிவானந்தன். 


” ஏ. கோழையே ! என்னுடைய அறிவையும் திறமையையும் பரிசோதித்துப் பார்ப்பதிலிருந்து நீ என்னைத் தடுக்க முடியாது,” என்று கோபத்துடன் வித்தியானந்தன் கத்தினான். 


 ” இரு, இரு, நான் முதலில் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன், ” என்று பயந்தவாறு கூறிய சிவானந்தன், அருகில் இருந்த மரத்தின் மீது தாவி ஏறினான். 


மரத்தின் உச்சாணிக் கிளையில் அவன் ஏறி அமர்ந்த போது வித்தியானந்தன் தன் திறமையால் அந்தச் சிங்கத்தை உயிர் பெறச் செய்தான். 


பலமாகக் கர்ச்சித்தவாறு எழுந்த சிங்கம் அந்த மூன்று அறிவில் சிறந்த நண்பர்களை தாக்கியது.


தங்கள் அறிவை தவறாக பயன்படுத்தியதை நினைத்தும், தங்கள் நண்பனை முட்டாள் என எண்ணியது குறித்தும் வருந்தினார்கள்.


 நீதி : கல்வியறிவைப் பயன்படுத்தி சமயோசிதமாக யோசிக்க வேண்டும்.



இன்றைய செய்திகள் - 23.01.2025


* வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 22- முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


* ஆன்லைன் வாயிலாக பதிவுக்கு வரும் பத்திரங்களை உரிய காரணம் இல்லாமல் திருப்பியனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.


* டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு.


* ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்.


* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னை - மோகன் பகான் ஆட்டம் 'டிரா'.


Today's Headlines


* A rare event where 6 planets line up in the sky at the same time can be seen with the naked eye. Special arrangements have been made at the Birla Planetarium in Chennai from January 22 to 25 for this.


* Dinesh Ponraj Oliver, Head of the Registration Department, has advised the sub-registrars not to return the documents received for registration online without proper reason.


* Air services affected due to heavy fog in Delhi.


* If Russian President Putin does not come for talks, economic sanctions on Russia - US President Trump takes action.


* Australian Open Tennis Series: Polish player Ika Swiatek advances to the semi-finals.


* ISL. Football Series: Chennai - Mohun Bagan match 'draw



02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...