பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-28.02.2025
திருக்குறள்
பால் :பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்:845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்.
பொருள்:
அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்."
பழமொழி :
When one door shuts another open.
ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
*புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்
*பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்
பொன்மொழி :
கற்றவர்களிடம் கற்பதை விட, கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொழ்..!---+காரல் மார்க்ஸ்
பொது அறிவு :
1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
விடை : பிப்ரவரி 28.
2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?
விடை : பஞ்சாப்
English words & meanings :
Lonely. - தனிமை,
Loving. - அன்பான
வேளாண்மையும் வாழ்வும் :
வேம்பு கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறந்த பூச்சிக் கொல்லி ஆகும்
. நீதிக்கதை
சாவி
ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது, "உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஒரு பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே எப்படி?
அதற்கு சாவி,"நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.ஆனால், நான் பூட்டின் இதயத்தை
தொடுகிறேன். என்னுடைய அன்பினால் பூட்டு விரைவில் திறந்து விடுகிறது"என்று பதில் கூறியது.
நீதி: அன்பே உலகை ஆளும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment