01-04-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.04.2025 திருக்குறள் பால் : பொருட்பால் அதிகாரம் :மானம் குறள் எண் :961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். பொருள் :இன்றியமையாதச் சிறப்பைத் தருவதாயினும் குடிப் பெருமைக்குக் குறைவானவற்றை செய்தலாகாது. பழமொழி : Face the danger boldly than live with in fear. அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள். இரண்டொழுக்க பண்புகள் : * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன். * சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன். பொன்மொழி : செய்யும் காரியம் தவறாகும் போது,நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.ஆனால் ஒருபோது மனம் தளராதே.. ---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ---- பொது அறிவு : 1. எந்த மாதத்தில் பிறப்பு விகிதம் அதிகம்? விடை : ஆகஸ்ட். 2. அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை முதன்முறை எங்கு செயல்பட்டது? விடை : சீனா English wor...