Songs

Wednesday, December 11, 2024

12-12-24-காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


இன்று  


12-12-24  இன்று 

சர்வதேச கன உலோக தினம். 

சர்வதேச கரலாகட்டை தினம்.  

அஜுனா விருது பெற்ற, புகழ்பெற்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்,  பத்மஸ்ரீ யுவராஜ் சிங் (1981) பிறந்த தினம்.

திருக்குறள் 

பால்:பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: கல்வி 

குறள் எண்:394

 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.


 பலரும் மகிழுமாறு அவர்களுடன் கூடிப் பழகி பின்னர் இவரை இனி எப்போது காண்போமோ என்று அவர்கள் எண்ணி ஏங்குமாறு அவர்களை விட்டுப் பிரிதலே கற்றறிந்த புலவர் தொழிலாகும்


பழமொழி

Never blow hot and cold in the same breath

முன்னுக்குப்பின் முரணாய்ப் பேசாதே. 


இரண்டொழுக்க பண்புகள் 

ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி 

வெற்றி பெற்றபின் அமைதியாக இருப்பவன், பலமுறை வென்ற மனிதன் ஆகிறான்.


பொது அறிவு

  • காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ? ஒக்கேனக்கல்
  • உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு? இந்தியா

 

English words & meanings :

impassable – impossible to travel through or go through.the narrow channels are impassable to ocean-going ships. adjective. 
1. கடந்து செல்ல முடியாத

2. ஊடுருவிச் செல்ல முடியாத. பெயரடை


தமிழ் அகராதி

வயம்-என்ற சொல்லின் பொருள் 

ஆடு, நீர், பறவை ,பூமி ,ஏற்றது, கிராம்பு ,முயல்

கணினி கலைச்சொற்கள்

ஆல்கொரிதம் (Algorithm):

ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்க அல்லது ஒரு பணியை செய்ய வழிகாட்டும் விதிமுறைகளின் அடுக்கம்.
எ.கா: தேடல் இயந்திரத்தில் தகவலை பெறும் செயல்முறை.


2. தரவுத்தொகுப்பு (Database):

தகவல்களை சீரான முறையில் சேமித்து, நிர்வகிக்கும் அமைப்பு.
எ.கா: MySQL, MongoDB.

இலக்கணம் (Grammer)

Perfect

S+V+O 

 I had eaten an apple- ஆப்பிள் சாப்பிட்டு இருந்தேன்

I have eaten an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டு இருக்கிறேன்

I shall have eaten an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டு இருப்பேன்

விவசாயம் -உணவு

தக்காளியில் மற்ற உணவுகளை விட அதிகளவில் வைட்டமின் சி உள்ளன. இந்த வைட்டமின் சி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகின்றன. முக்கியமாக தக்காளியை ஒருவர் சமையலில் சேர்ப்பது மட்டுமின்றி, அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம்


நீதி கதை 

குருவியும் கொக்கும்

ஒரு நாள் ஒரு குருவியும் கொக்கும் நதிக்கரையில் சந்தித்தன. குருவி, கொக்கின் நீண்ட கழுத்தையும் அழகிய தோற்றத்தையும் பார்த்து பொறாமைப்பட்டு சொன்னது:
"நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! நான் கூட உன் மாதிரியான நீண்ட கழுத்தை பெற்றிருந்தால் நன்றாக இருக்கும்."

அதற்கு கொக்கு புன்னகைத்துக் கூறியது:
"நீ பார்ப்பது ஒரு தோற்றமே. நீயே உன் சிறிய தோள்களைப் பார்த்தால், உனக்குள்ளே இருக்கும் விருப்பம், வேகத்துக்கும் அடையாளம். எல்லா உயிரினங்களுக்கும் தனித்தன்மை இருக்கிறது, அதை மதிக்க வேண்டும்."

குருவி அதை உணர்ந்து, தன் சிறியதன்மையை விரும்பக் கற்றுக் கொண்டது.

நீதி:
ஒவ்வொருவருக்கும் தனக்கே உரிய திறமையும் தனித்தன்மையும் இருக்கின்றன. அவற்றை மதிப்பதே நியாயம்.


இன்றைய செய்திகள் 

12.12.2024

🎷திண்டிவனத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிய டாபர் நிறுவனம். இதன் மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


🎷திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி காலை வரை கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிப்பு.


🎷* நாளை (டிச.12) வைக்கம் போராட்டம் துவங்கிய தந்தை பெரியார் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் பங்கேற்கிறார்.


🎷* புதியதாக தினமும் 2 லட்சம் வாகனங்களுக்கு இடமளிக்கக்கூடிய அளவுக்கு பெங்களூருவில் மாபெரும் பறக்கும் பாலம் ஒன்று கட்டப்படவிருக்கிறது . இது பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


* 🎷சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.


*🎷உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஸ் உடனான ஆட்டத்தை 13வது சுற்றில் டிங் டிரா செய்தார்.


Today's Headlines


🎸* Dabur has started construction of a new factory in Tindivanam. This will provide employment to 750 people.


🎸* Announcement of a diversion route for heavy vehicles until the morning of the 15th in Tiruvannamalai on the occasion of the Karthigai Deepa festival.



* 🎸Tomorrow (Dec. 12), Vaikom will hold a protest to mark Father Periyar's centenary. The Chief Minister will participate!



🎸* A new giant flying bridge will be built in Bengaluru to accommodate 2 lakh vehicles daily. This is expected to help reduce traffic congestion in Bengaluru.



🎸* 7 planes are circling in the sky at Chennai airport, unable to land. Heavy rains accompanied by gale-force winds have affected flight services at Chennai airport.



* 🎸World chess championship: Ding holds Gukesh to draw in Game 13, retains advantage.


Thank you

www.waytoshines.com

Tuesday, December 10, 2024

11-12-2024- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 



நாள்: 11-12-24


இன்று  

சர்வதேச மலைகள் தினம்.

கர்நாடக இசை கலைஞர் M.S. சுப்புலட்சுமி (2004) நினைவு தினம்.  

பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்தவரும்,, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் புதிய ஆத்திசூடி போன்ற காவியங்களை படைத்த  தேசிய கவி.  மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882), 

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி (1935),

 சதுரங்க விளையாட்டின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (1969) ஆகியோரின் பிறந்த தினம்

UNICEF DAY

 

திருக்குறள் 

பால்:பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: கல்வி 

குறள் எண்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு 

புண்ணுடையர் கல்லா தவர்


கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர் 

பழமொழி

1.அக்கம் பக்கம் பார்த்து பேசு

2.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

இரண்டொழுக்க பண்புகள் 

நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன் 

துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்

பொன்மொழி 

இலக்கை அடைவதில் மன உறுதியாக இருந்தால் அதை அடையும் மார்க்கமும் உங்களின் முன் தெளிவாக தெரியும்

பொது அறிவு

1.முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது 

கோலாலம்பூர் 

2.வேர் இல்லாத தாவரம் எது 

காளான்

 

English words & meanings :

Linguistics -மொழியியல் 

Philologist -மொழியியலாளர்

தமிழ் அகராதி

நசை-அன்பு, ஆசை, ஈரம், ஒழுக்கம்,               விருப்பம்

கணினி கலைச்சொற்கள்

Window-சாளரம்

Wizard-வழிகாட்டி

இலக்கணம் (Grammer)

Continuous 

S+V+O 

I was eating an apple- ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் 

I am eating an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்

I shall be eating an apple-நான் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்

விவசாயம் -உணவு

பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்

நீதி கதை 

மயில் மற்றும் காகம்

ஒரு மயில் மற்றும் காகம் வனத்தின் அருகில் வாழ்ந்தன. மயில் தனது அழகான வெண்ணிற இறக்கைகள் மற்றும் மஞ்சள் பச்சை வண்ணங்கள் கொண்ட உடலால் பெருமை பட்டது. காகம் அதன் கருமை நிறத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட உணர்ந்தது.

ஒரு நாள், காகம் மயிலிடம் சென்று, "நீ மிகவும் அழகானவளாக இருக்கிறாய். உன் இறகுகளால் அனைவரின் பார்வையும் ஈர்க்கிறது. ஆனால் என்னை பார்த்தால், என்னில் எதுவும் அழகாக இல்லை" என்று சோகத்துடன் கூறியது.

மயில் சிரித்து, காகத்திடம் சொன்னது:
"ஆமாம், என் இறகுகள் அழகாக இருக்கலாம். ஆனால் என் ஆற்றல் என் உடலின் வண்ணத்தில் இல்லை. நான் பறக்க விரும்பினால் முட்டாதியில் முடியும், ஆனால் நீ வானத்தில் உயரமாக பறக்க முடியும்."

அதை கேட்ட காகம் தனது ஆற்றலையும் தன்மையான திறன்களையும் உணர்ந்தது. அதன் பிறகு, காகம் எந்த கலங்கலும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தது.

கதை நெறி:
ஒவ்வொருவருக்கும் தன்னிடத்தில் தனித்தன்மை உள்ளது. பிறரைப் பார்த்து நட்பிழக்காமல், நம் தனித்தன்மையை அறிந்து வாழ வேண்டும்.

இன்றைய செய்திகள் 

11-12-2024

* ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய பலனுக்கு ரூ.372 கோடி: சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல்.

* மணிப்பூர் வன்முறையில் எரிக்கப்பட்ட சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் பணி, மூன்று நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கை திட்டத்தை டோக்கியோ கவர்னர்  அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி 2-வது வெற்றி.

* புரோ கபடி லீக்; பரபரப்பான ஆட்டத்தில் புனேரி பால்டனை வீழ்த்தி வெற்றி பெற்ற தபாங் டெல்லி அணி.

Today's Headlines

* Tamil Nadu Chief Minister M. K. Stalin announced in the Legislative Assembly that the birthday of 'Tamil Thatha' VU. Ve. Saminatha Iyer will now be celebrated as Tamil Literature Revival Day.

* Rs 372 crore for  Transport corporation employee pension benefit: First supplementary budget tabled in Assembly

* Supreme Court orders to file details of property burnt in Manipur violence

* It has been reported that the Governor of Tokyo has announced a new work schedule policy for government employees, with four work days a week and three days off, starting in April next year.

* Women's Junior Asia Cup Hockey: The Indian Team  won 2nd time also

* Pro Kabaddi League; Dabang Delhi beat Puneri Paltan in a thrilling match



Thank you

www.waytoshines.com

1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

2024 - 2025 கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம் முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டு பார்வையில் காண் கடிதம் மூலம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டும் , மதிப்பீடு செய்தும் ( Assessment ) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள் அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 மேற்படி பயிற்சி கட்டகத்தினை இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே 14.12.2024 அன்று முதல் காணொலி மூலம் கீழ்க்காணும் வகையில் 7 கட்டகங்களாக மாவட்டங்களில் அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது

Baseline & Endline Assessment - SCERT Proceedings - 







Monday, December 9, 2024

10-12-2024 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 

நாள்: 10-12-24


இன்று 

நோபல் பரிசு தினம். நோபல் பரிசை உருவாக்கிய அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களின் நினைவு நாள்

சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம். 

மனித உரிமைகள் தினம். 

இந்திய இயற்பியலாளரான மதன்லால் மேத்தா (2006), இந்திய பொறியியல் அறிஞரும் கல்வியாளருமான வா.செ. குழந்தைசாமி (2016) ஆகியோரின் நினைவு தினம். 

சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், இந்தியாவின் 

கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதலமைச்சர் என பன்முகம் கொண்ட மூதறிஞர் ராஜாஜி (1878) பிறந்த தினம்.

 

திருக்குறள் 

பால்:பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: கல்வி 

குறள் எண்: 392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு..  

விளக்கம்

‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள்.

பழமொழி 

Empty vessels Mac the greatest nice 

குறைகுடம் கூத்தாடும் 

இரண்டொழுக்க பண்புகள் 

1.ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 

2.முயன்றால் பட்டாம்பூச்சி முயலா விட்டால் கம்பளிப் பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி 

ஏழைகள் உணவை தேடுகிறார்கள் செல்வந்தர்கள் பசியை தேடுகிறார்கள்

            -கிரீஸ் நாட்டு பழமொழி

பொது அறிவு 

  • நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? ஒடிசா

  • ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ? கனடா

 

English words & meanings :

Escalator      -     மின் படிக்கட்டு

E Magazine          -     மின் இதழ்கள்


கணினி கலைச்சொற்கள்

Central processing unit (CPU)-மைய செயலகம்

Control unit-கட்டுப்பாட்டகம்

இலக்கணம் (Grammer)

Simple present tense

S+V+O 

I ate an apple- ஆப்பிள் சாப்பிட்டேன் 

I eat an apple-நான் ஆப்பிள் சாப்பிடுகிறேன் 

I shall eat an apple-நான் ஆப்பிள் சாப்பிடுவேன்

விவசாயம் -உணவு

வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி, சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்


நீதி கதை 

**பால் விற்பனையாளர் மற்றும் பாலத்தில் கலந்த தண்ணீர்**  

ஒரு கிராமத்தில் ஒரு பால் விற்பனையாளர் இருந்தான். அவன் பாலை விற்கும் போது, அதில் தண்ணீர் கலந்துவிற்கும் பழக்கமுடையவன். இந்த நகைச்சுவையால், அவன் நல்ல லாபம் சம்பாதித்தான்.  

ஒரு நாள், அவன் அதேபோல தண்ணீர் கலந்த பாலை விற்று வந்த பணத்தை பையில் வைத்து ஆற்றை கடந்தான். அப்போது, பைகள் காற்றில் கலைந்து, அவனுடைய பணம் ஆற்றில் விழுந்து போய்விட்டது.  

அவன் சோகத்துடன் கண்களை மூடி, நம்பிக்கையுடன் இறைவனை வேண்டினான். அப்போது ஒரு குரல் கேட்டது:  

**"நீ பாலில் தண்ணீர் கலந்தது போல, உன் பணமும் தண்ணீரில் கலந்துவிட்டது. நீ தர்மமாக இருந்தால் இத்தகைய அநியாயம் உனக்கு நேர்ந்திருக்காது."**  

அந்த நாளுக்குப் பிறகு, பால் விற்பனையாளர் தன் தவறை உணர்ந்து நேர்மையானவனாக வாழ்ந்து வந்தான்.  

**கதை நெறி**:  

**தவறான வழியில் சம்பாதிப்பது நிரந்தரமாக நம்மிடம் இருக்காது. நெறியுடன் வாழ்வதே உண்மையான செல்வம்.**

இன்றைய செய்திகள் 

10-12-2024

தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

* டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

* தமிழகத்​தில் சீசன் முடிந்த பிறகும் காற்​றாலைகளில் இருந்து கூடுதல் மின்​சாரம் கிடைப்​ப​தால், அனல் மின் உற்பத்​தியை மின்​வாரியம் குறைத்​துள்ளது.

* ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்.

* குவாஹாட்டி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

* பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா.

Today's Headlines

* The Madurai Bench of the High Court said that the Persons with Disabilities Act also applies to temporary employees.

* A separate resolution brought in the Tamil Nadu Legislative Assembly was passed unanimously urging the central government to immediately cancel the tungsten mining license and not to issue any mining license without the state government's permission.

* Even after the end of the season in Tamil Nadu, wind turbines produce Electricity so the Electricity Board has reduced the thermal power generation due to the availability of additional electricity

* Sanjay Malhotra was appointed as the new Governor of RBI.

* India's Tanisha Christo and Ashwini Ponnappa won the Guwahati Masters Super 100 badminton tournament.

* Women's Junior Asia Cup Hockey Tournament: India start with a victory



Thank you

www.waytoshines.com

09-12-24 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 

நாள் : 9- 12 -2024

இன்று உலக ஊழல் ஒழிப்பு தினம்

இயற்கையின் அதிசயம் -காணொளி



திருக்குறள் 

 பொருட்பால்

 அரசியல் 

கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
 

கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும் 


பழமொழி
Time stoops to no man's cure.

காலம் யார் கணிப்புக்கும் அடிபணியாது


 இரண்டொழுக்க பண்புகள்
நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன் என்னால் இயன்ற அளவு வீட்டிலும் பள்ளியிலும் செடிவளர்ப்பேன்
பொன்மொழி
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான் ---சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?


விடை: மொழி

2. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எது?

விடை: மதுரை

English words & meanings :

Shock       -     அதிர்ச்சி,

Shy           -      கூச்சம்

கணினி கலைச்சொற்கள்
Application Software -பொதுப்பயன்பாட்டு மென்பொருள்
Browser -உலவி 
அறிவோம் -விவசாயம்- உணவு
வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்வையும் தரக்கூடியது.

டிசம்பர் 09

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்

ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.

1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.

நீதிக்கதை

கண்ணாடி

ஒரு நாள் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், தகவல் பலகையில் ஏதோ எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சென்றனர்.

அதில்," உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரை நான் பெட்டிக்குள் அடைத்து விட்டேன். அந்தப் பெட்டி அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ளது. அனைவரும் வந்து பார்த்துச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.

நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபரா,அது யாராக இருக்கும்? என்று அனைவர் மனதினுள் ஒரு கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதில் காணும் ஆர்வத்தில் அனைவரும் அடுத்த கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றனர். அங்கே ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

அனைவரும் அந்த பெட்டியின் உள்ளே  பார்த்தபின் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்தப் பெட்டினுள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. எவர் பார்த்தாலும் அவர்களது முகமே அதில் தெரிந்தது.

அந்த கண்ணாடியின் அருகில், "உங்கள் வளர்ச்சிக்கு  நீங்கள் தான் காரணம்.நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் உள்ளது உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும்  தடுத்து நிறுத்த முடியாது" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது

நீதி :  உங்கள் வாழ்க்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது.உங்கள் வாழ்க்கையை உங்கள் நண்பனால் மாற்ற முடியாத. நீ நினைத்தால் மட்டுமே உங்களது வாழ்வை மாற்ற முடியும்.

இன்றைய செய்திகள்

09.12.2024

* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி பாலத்திற்கான உத்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

* படைவீரர் கொடி நாள் நிதி வசூலில் சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

* வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: டிசம்பர் 10 முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

* ரஷ்யாவில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட போர்க் கப்பல்: ஐஎன்எஸ் துஷில் இன்று கடற்படையில் சேர்ப்பு.

* உலக செஸ் சாம்பியன்ஷிப்: 10-வது சுற்றும் டிரா.

* இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இரண்டரை நாட்களில் முடிந்த போட்டி மூலம் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 1-1 என்ற நிலையில் சமநிலை வகிக்கின்றன.

Today's Headlines

* The glass bridge between Thiruvalluvar Statue and Vivekananda Mandapam in Kanyakumari has been installed.

* Chennai district has topped the collection of funds for Veterans' Flag Day.

* A new low-pressure area has formed in the Bay of Bengal. According to the Meteorological Department, Heavy rains are likely from December 10.

* Russian-built warship: INS Tushil to be inducted into the Navy today.

* World Chess Championship: 10th round draw.

* Australia won the second Test match against India. India and Australia are tied 1-1 after the match ended in two and a half days.













02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...