Songs

Monday, December 23, 2024

23-12-24 - காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.12.2024



23-12-24  இன்று

 இந்திய விவசாயிகள் தினம். விவசாயிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

 முதல் ட்ரான்சிஸ்டர், பெல் ஆய்வுக்கூடத்தில், வெற்றிகரமாக (1947) பரிசோதிக்கப்பட்டது. 

இரும்பினாலான, உலகின் மிகப்பெரிய கோபுரம், டோக்கியோவில் (1958) அமைக்கப்பட்டது. 

முதல், மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அமெரிக்காவில் வெற்றிகரமாக (1954) நடத்தப்பட்டது.

 இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர், சரண் சிங் (1902) பிறந்த தினம்.
திருக்குறள் :

பால்: அறத்துப்பால்  

அதிகாரம்/Chapter:   இன்னாசெய்யாமை / Not doing Evil :  

குறள் 313:

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்  
உய்யா விழுமந் தரும்.

மு.வரதராசன் விளக்கம்:

தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

பொன்மொழி

1) எங்கு கூச்சல் அதிகமாக இருக்கின்றதோ, அங்கு உண்மையான அறிவு இருப்பதில்லை.  

2) என்றும் நினைவில் கொள். மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.


பழமொழி :

Every man is mad on some point

சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே  

இரண்டொழுக்க பண்புகள் :


 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 


2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம். : 

பொது அறிவு

  • நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்– சுறாமீன்.

  • நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு - ஜப்பான்.

  • தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது? ஞான உலா

  • கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ? தென்னாப்பிரிக்கா

உணவு:

அரிசியின் பயன்கள்

ற்றல் வழங்கும்:

    • அரிசி கார்போஹைட்ரேட்டுகளில் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. இது வேலை செய்யும் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • தூய்மையான தோல்:

    • அரிசி மற்றும் அரிசி நீர் தோலை மிருதுவாகவும் பிரகாசமாகவும் மாற்றும் தன்மை கொண்டது.
  • நீர்ச்சத்து வழங்கும்:

    • அரிசியில் உள்ள செலுலோஸ் நமக்கான நீர்ச்சத்து அளவைப் பூர்த்தி செய்யும், இது செரிமானத்துக்கு உதவுகிறது

  • நீதிக்கதை

    குரங்கும் வெள்ளாளனும்

    ஒரு ஊரின் அருகே ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தை விவசாயி ஒருவர் வழிநடத்தி வந்தார். தினமும் அவர் தனது தோட்டத்துக்கு சென்று வேலைகளை பரிசோதித்து, பிறகு திரும்பி வந்தார்.

    அந்த தோட்டத்தில் ஒரு சிறிய குரங்கு வாழ்ந்து வந்தது. விவசாயி தோட்டத்தில் இருந்த பழங்கள், பண்டங்கள், வேறு சில பொருட்களை குரங்கு திருடி எடுத்து செல்வது வழக்கமாக இருந்தது.

    ஒரு நாள், விவசாயி குரங்கின் இந்த நடவடிக்கையை கவனித்து, அதை ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார். அவர் சில பழங்களை ஒரு பெரிய பிணையில் வைத்தார். ஆனால் பிணையின் வாயை மிகவும் சின்னதாக வைத்திருந்தார்.

    குரங்கு அந்த பிணையை பார்த்து ஆச்சரியத்தில் இறங்கியது. அதில் இருந்த பழங்களை எடுக்க தனது கையை உள்ளே நுழைத்தது. ஆனால், கையில் பழங்களை பிடித்தவுடன் கையை வெளியே எடுக்க முடியவில்லை. குரங்கு கோபத்துடன் அடித்து பார்த்தும், கையை விடுவிக்க முடியவில்லை.

    அதே சமயம், விவசாயி குரங்கிடம் சென்று, மெதுவாக சொன்னார்:
    "நீ விரும்புகிற பழங்களை எல்லாம் கை விடுவாய் என்றால், உன் கை வெளியே வராது. பழத்தை எடுக்க இனி கையை உள்ளே விடாதே...

    குரங்கு விவசாயின் வார்த்தைகளை புரிந்து கொண்டு, பிடித்திருந்த பழங்களை விட்டது. கையினை வெளியே எடுத்து, சுதந்திரமானது.


    நீதி:

    பேராசை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். பேராசையை விடுத்து வாழும் வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.


    முக்கியச் செய்திகள் : 
    23.12.2024 - திங்கள்   

    மாநிலச்செய்தி:

    தேவை, நிர்வாக நலன் அடிப்படையில் ஊராட்சி செயலர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர்

    உள்நாட்டுச்செய்தி:

    பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு!

    உலகச்செய்தி:

    2 நாள் அரசு முறை பயணம் இந்திய மனித வளத்தால் புதிய குவைத் உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு

    விளையாட்டுச்செய்தி:

    21-ம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

    School Morning Prayer Activities in English Today

    Important News: 23.12.2024 -   Monday   

    State News:

    Panchayat secretaries should be consulted and transferred based on need and administrative interest: Director of Rural Development

    National  News:

    ISRO decides to launch PSLV C-60 rocket on the 30th!

    World News:

    2-day official visit New Kuwait will be created by Indian human resources: PM Modi's speech

    Sports News:

    A rare cricket achievement of the 21st century: Pakistan team is amazing!





    Sunday, December 22, 2024

    நான்காம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் மூன்று பாடல்கள்

    நான்காம் வகுப்பு தமிழ் பாடல்கள் கேட்க இங்கே கிளிக் செய்க 






    https://youtube.com/playlist?list=PLOOtVdhsXANAFRwqSux_Mv0doB_txb-9q&si=Ln1KxdMEOSecXRqx

    மூன்றாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தமிழ் பாடல்கள்

    மூன்றாம் வகுப்பு பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்க




    உள்ளங்கையில் ஓர் உலகம்


    உலகைச் சுற்றிக் காட்டிடுவேன் 


    உனக்கு மகிழ்ச்சியைத் தந்திடுவேன் 


    என்ன வேண்டும் என்றாலும் 


    எண்ணும் முன்னே சொல்லிடுவேன்


    இணைய வழியில் அனைவரையும்


     இணைந்தே இருக்கச் செய்திடுவேன் 


    கடிதம் அனுப்ப வேண்டுமென்றால்

    https://youtube.com/playlist?list=PLOOtVdhsXANBLv-BlmjAvlfL9g-gQ0UkW&si=mIHh-fCZAEu_Udv7



     விரைந்தே அனுப்பத் துணைபுரிவேன்


    தகவல் களஞ்சியம் நான்தானே


     தரணி போற்றி மகிழ்ந்திடுமே 


    உலகைச் சுருக்கி உன்கையில் 


    உலவிடும் கணினி நான்தானே


    என்றும் ஓய்வு எனக்கில்லை 


    எதிலும் சோர்வு என்றில்லை 


    எந்தப் பொருளின் செய்தியையும்


     எடுத்துத் தருவேன் ஒருநொடியில்


    உள்ளங்கையில் ஓர் உலகம்


     உள்ளதைக் காட்டும் கண்ணாடி


    என்றே என்னை எல்லாரும்


     ஏற்றம் கொண்டே அழைத்திடுவார்.


    மழைநீர்


    மழைநீர் வெள்ளம் ஓடியே 


    மண்ணில் வீணாய்ச் செல்லுதே 


    உழைப்பின் வியர்வை போலவே


     உயர்வாய் எண்ண வேண்டுமே!


    பொன்னும் பொருளும் போலவே


     பொழியும் நீரும் செல்வமே 


    விண்ணின் கொடை என்பதில் 


    வியப்பு ஒன்றும் இல்லையே!


    குளங்கள் ஏரி நிரம்புமே


     குருவி கொக்கும் வாழுமே 


    வானின் அமுதம் சேமித்தே 


    வாழ்வைச் செம்மை செய்வமே!


    நாடும் வீடும் செழிக்கவே 


    நல்ல தண்ணீர் வேண்டுமே 


    ஓடும் நீரைத் தேக்கியே


     உலகின் பசியைத் தீர்ப்பமே !


    உழவும் தொழிலும் ஓங்கவே 


    உற்ற துணை மழைதானே 


    வளமும் நலமும் நிறைந்திட 


    வணங்கி மழையைப் போற்றுவோம்!


    மனிதர் பறவை விலங்குகள்


     மகிழ்ந்து வாழத்தேவையே


     இனிய மழை வரும்போதே 


    இல்லம் முழுதும் சேமிப்போம்!


    https://youtube.com/playlist?list=PLOOtVdhsXANBLv-BlmjAvlfL9g-gQ0UkW&si=mIHh-fCZAEu_Udv7



    இரண்டாம் வகுப்பு- தமிழ்- மூன்றாம் பருவம்- மூன்று பாடல்கள்

     

    இரண்டாம் வகுப்பு தமிழ் பாடல்களை கேட்க இங்கு கிளிக் செய்க














    பூசணிக்காய் தலையிலே 

    பச்சை மிளகாய் மூக்குதான்! 

    திராட்சை இரண்டு கண்களாம்

     தக்காளிப்பழ வாய்தானாம்


    பரங்கிக்காய் உடம்பிலே 

    புடலை இரண்டு கைகளாம்

     வெண்டைக் காய்கள் விரல்களாம் வெள்ளரிக்காய் கால்களாம்

    காயும் பழமும் மனிதர்போல் 

    காண அழகு பாருங்கள் நடனம் ஆடப் போகிறார் நாமும் காண்போம் வாருங்கள்




    யாரு? யாரு? யாரு?

    கத்தரிக்காய்க்குக் குடைபிடிக்கக் கற்றுக்கொடுத்தது யாரு?

    அந்தக் கடலைக்கொட்டையை முத்துச் சிப்பிபோல மூடிவச்சது யாரு?

    பருத்திச்செடிக்குப் பஞ்சு மிட்டாயைத் தின்னக்கொடுத்தது யாரு?

    அந்த வாசனையில்லாக் காகிதப் பூவுக்கு வண்ணமடிச்சது யாரு?

    ஆலமரத்துக்கு அத்தனை ஊஞ்சலை ஆடக்கொடுத்தது யாரு?

    அந்தத் தொட்டாச்சிணுங்கி பட்டுன்னு மூடிக்கக் கட்டளை போட்டது யாரு?

    யாரு? யாரு?கூறு அந்த இயற்கை அன்னையாம் பாரு

    -வையம்பட்டி முத்துசாம்



     வண்ணம்தொட்டு வண்ணம் தொட்டு

     படங்கள் வரையலாம் வானவில்லைத் தொட்டும் கொஞ்சம்

     படங்கள் வரையலாம்

    நீலம்தொட்டு நீலம்தொட்டு 

    கடலும் வரையலாம்

    கடலலையில் கடலலையில்

    கால்கள் நனைக்கலாம்

    பச்சைதொட்டு பச்சைதொட்டு 

    மரங்கள் வரையலாம்

    மரக்கிளையில் மரக்கிளையில் ஊஞ்சல் ஆடலாம்

    சிவப்புதொட்டு சிவப்புதொட்டு


    பூக்கள் வரையலாம்


    பூக்கள்போல பூக்கள்போல


    பூத்துச் சிரிக்கலாம்

    Saturday, December 21, 2024

    முதல் வகுப்பு- தமிழ்- மூன்றாம் பருவம்- நான்கு பாடல்கள்

    முதல் வகுப்பு தமிழ் பாடம் பாடல்கள் கேட்க இங்கே கிளிக் செய்க








    Please click and hear  


    கண்ணாடி

    மெத்தப் பெரிய கண்ணாடி வீட்டில் என்னிடம் இருக்கிறது நித்தம் நித்தம் அதன் முன்னால் நின்றே அழகு பார்த்திடுவேன்


    எப்படி எப்படி செய்தாலும் என்போல் அதுவும் செய்திடுமே நன்மை செய்தால் நன்மை தான் நம்மை நாடி வந்திடுமே


    -அழ.வள்ளியப்பா



    என்ன வண்ணம் வேண்டும்?

    வெள்ளை வண்ணம் வேணுமா? - அம்மா! வெண்ணெய் கொஞ்சம் அள்ளிக்கோட


    கருப்பு வண்ணம் வேணுமா?- அம்மா! காக்கைக் குஞ்சிடம் வாங்கிக்கோ! பச்சை வண்ணம் வேணுமா?- அம்மா! கிளியைக் கண்டு பேசிக்கோ! நீல வண்ணம் வேணுமா? - அம்மா! நீயே கடலைப் பார்த்துக்கோ! சிவப்பு வண்ணம் வேணுமா? - அம்மா! செந்தாமரையைக் கேட்டுப்பார்! மஞ்சள் வண்ணம் வேணுமா? - அம்மா! வான நிலாவைத் தொட்டுக்கோ!

    எல்லா வண்ணமும் வேணுமா? - அம்மா! என்னை இடுப்பில் எடுத்துக்கோ!


    -ஈரோடு தமிழன்பன் 


    வண்ணத்துப்பூச்சி

    தோட்டமெல்லாம் சுற்றிவரும் வண்ணத்துப்பூச்சி-உன்னைத் தொட்டுப் பார்க்க வேண்டுமே வண்ணத்துப்பூச்சி.


    பட்டுப்போலப் பளபளக்கும் வண்ணத்துப்பூச்சி பறக்கும் பூவைப் போலிருக்கும் வண்ணத்துப் பூச்சி.


    சின்னப் பாப்பா கேட்கிறேனே வண்ணத்துப்பூச்சி-நீ திரும்பி என்னைப் பார்த்திடுவாய் வண்ணத்துப்பூச்சி.


    பொம்மை


    அம்மா தந்த பொம்மை

    அழகழகு பொம்மை தலையை ஆட்டும் பொம்மை தஞ்சாவூரு பொம்மை


    தாளம் தட்டும் பொம்மை தாவி ஓடும் பொம்மை நான் விரும்பும் பொம்மை நல்ல கரடிப் பொம்மை


    IFHRMS 2.0 - ஜனவரி 2025 முதல் அமல் - களஞ்சியம் ஆப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? ஆணையர் விளக்க கடிதம்!!!

     


    ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் அறிவுறுத்தலின்படி , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . களஞ்சியம் கைப்பேசி செயலி 01 01 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர இருப்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது


    இச்செயலி மூலம் . அரசு ஊழியர்கள் தங்களின் Pay Slip , Pay Drawn Particulars முதலிய அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .


    மேலும் விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு ஈட்டிய விடுப்பு முதலியவைகளும் ) , பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றையும் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் 

    மேலும் பண்டிகை முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு தொடர்பான செயல்முறை ஆணைகளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .


     பொது வருங்கால வைப்பு நிதி ( CIW மற்றும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் CPS க்கான மீதத்தொகையை சரிப்பார்த்துக் கொள்ளலாம் .

     ஓய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை இச்செயலி மூலம் செய்யலாம் . மேலும் Pension Slipy , Pension Drawn Particulars Form 16 ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

    மேலும் களஞ்சியம் கைப்பேசி யெலியை Google Play Store po ம் பதிவிறக்கம் செய்யலாம் . இச்செயலி சம்பந்தமான சந்தேகங்களை அறிய சம்பளக் கணக்கு அலுவலகம் ( வடக்கு ) , சென்னை -0 யை தொடர்பு கொள்ளலாம் . இப்பொருள் தொடர்பான சுற்றறிக்கை வற்கனவே அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

    INCOME TAX CALCULATION AY 2025-2026FY(2024-2025)


    https://sites.google.com/view/arunagirik/
     

    21-12-24 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2024

     


    பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2024


    திருக்குறள்: 

    பால் :பொருட்பால்

    அதிகாரம்: சூது

    குறள் எண் :940

    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற்று உயிர்.

    பொருள்:
    பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் குதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருத்த வருந்த உயிர் மேன் மேலும் காதல் உடையதாகும்.

    பழமொழி :

    Justice delayed is justice denied

    தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்

    இரண்டொழுக்க பண்புகள் :  

      *இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் விரைவாக தூங்கி அதிகாலையில் எழுவேன்.

    *தினமும் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வேன்.

    பொன்மொழி :

    கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவனாக்குகின்றன---அரிஸ்டாட்டில்

    பொது அறிவு : 

    1. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகலிடம் பெற்ற இடம் எது? 

    விடை: பத்தமடை. 

    2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது? 

    விடை: கன்னியாகுமரி.

    English words & meanings :

     Reading       -       வாசித்தல் 

     Sewing        -       தையல்

    நீதிக்கதை

    கற்றுக்கொடுத்த துரும்பு

    ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் கோபக்காரன். எதிலும் சிறிது தவறாக நடந்தாலும் உடனே கோபம் கொழுந்துவிட்டு எழும்.
    அந்த சிறுவனின் தந்தை, அவனின் கோபத்தால் அனைவரும் அவனை தவிர்த்து வாழ்வதை கவனித்தார்.
    ஒருநாள், அவர் தனது மகனுக்கு ஒரு மரத்தொட்டு கொடுத்து, "நீ கோபமாக இருந்தபோது ஒவ்வொரு முறை இந்த மரத்தில் ஒரு துரும்பை அடிக்க வேண்டும்" என்று சொல்லினார்.

    முதல் நாளில், சிறுவன் 37 துரும்புகளை அடித்தான்.
    பரிசீலிப்பின் மூலம், அவன் தினசரி துரும்புகள் குறைந்து வந்தன. சிறுவன் யோசிக்க ஆரம்பித்தான்:
    "துரும்புகளை அடிப்பது கொஞ்சம் கஷ்டமானது. அதைவிட, நான் என் கோபத்தை கட்டுப்படுத்தினால் எளிதாக இருக்கும்."

    சில நாட்களில், அவன் தனது கோபத்தை முழுமையாக கட்டுப்படுத்தத் தொடங்கினான்.
    அதைக்கண்டு, அவனின் தந்தை மகிழ்ந்தார். அவர் சிறுவனிடம் சொன்னார்:
    "நீ இன்னும் ஒரு வேலையை செய்ய வேண்டும். இனி கோபப்படாமல் இருந்த ஒவ்வொரு நாளும், ஏற்கனவே அடித்த துரும்புகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துவிடு."

    இது தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. ஒரு நாளில், சிறுவன் சொன்னான்:
    "அப்பா, நான் அனைத்து துரும்புகளையும் அகற்றிவிட்டேன்."

    அந்தத் தந்தை மரத்தைத் நோக்கிப் பார்த்து சொன்னார்:
    "நீ துரும்புகளை அகற்றினாலும், மரத்தில் படைத்த சுவடுகள் இருந்து விட்டன. அதே போல, கோபத்தின் மூலம் நீ யாரையும் புண்படுத்தினால், அந்த மரம் போலவே அவர்களுடைய இதயத்தில் சுவடு உண்டாகும். அதை எப்போது மாற்ற இயலும்? எனவே, யாருக்கும் துன்பம் தராத வாழ்க்கையை நீ பழக வேண்டும்."


    நீதி:

    கோபம் ஒரு தருணத்தில் வரலாம், ஆனால் அதன் பின்விளைவுகள் நீண்டகாலத்துக்கு இருக்கும். அடக்கமாகவும் தன்னடக்கத்துடன் வாழ்ந்து மற்றவர்களை நலம் செய்.


     

    இன்றைய செய்திகள்

    21.12.2024

    * தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    * சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்​சி​யில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்​கிறது: மத்திய அரசு பாராட்டு.

    * மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

    * நாடு முழுவதும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    * சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார்: நாசா புதிய தகவல்.

    * பிபா இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி.

    * பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர்; 26-ந்தேதி தொடக்கம்.

    Today's Headlines

    * Speaker Appavu has announced that the Tamil Nadu Legislative Assembly session will begin on January 6 with the Governor's address.

    * Tamil Nadu is a pioneer state in Siddha medical education and research: Central government praises.

    * The Social Welfare Department has ordered the appointment of 8,997 cooking assistants in nutrition centers, each with a monthly salary of Rs. 3 thousand.


    * The Central government has ordered the state governments to expedite the work of providing piped drinking water connections across the country.

    * Sunita Williams will return to Earth only in March: NASA new information.

    * FIFA Intercontinental Football Cup: Spain's Real Madrid team won the championship.

    * The Junior Super Kings cricket series between schools; starts on the 26th.

    Thursday, December 19, 2024

    20-12-2024- காலை வழிபாட்டு செயல்பாடுகள்

     




    20-12-24  இன்று 


    திருக்குறள்


    குறள் பால்: பொருட்பால். 

    இயல்: அரசியல்.
     
    அதிகாரம்: கேள்வி.



    குறள் 411:
    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்து ளெல்லாந் தலை.
    செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.



    இரண்டொழுக்க பண்புகள்

    1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

     2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

    பழமொழி :

    Never blow hot and cold in the same breath

    முன்னுக்குப்பின் முரணாய்ப் பேசாதே

    பொன்மொழி 

    சென்று கொண்டிருப்பவன் காலத்தை வென்று கொண்டிருக்கிறான் 

    நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டிருக்கிறான்


    பொது அறிவு

    1. தமிழ் மகள் என்று அழைக்கப்படுபவர் யார்?

     ஔவையார்.

     2. 'முர்ரா 'என்பது என்ன?

     எருமையின் உயர் ரக இனம். 

    English words & meanings :

  •  impassable – impossible to travel through or go through.the narrow channels are impassable to ocean-going ships. adjective. 
    1. கடந்து செல்ல முடியாத
    2. ஊடுருவிச் செல்ல முடியாத. 
  • உணவு


    முட்டை ஊட்டச்சத்தில் லுடீன் உள்ளது, இது மூளை மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். முட்டையின் நன்மைகள் மிகப் பெரியவை, அவை செல்கள், நினைவகம், நரம்பு மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. மற்றொரு முட்டை நன்மை என்னவென்றால், இது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது


  • இன்றைய சிறப்புகள்

  • தீங்கு செய்பவன் கெடும்
  • ஒரு அடர்ந்த காட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அது மிகவும் ஆவேசமாகவும் கோபமாகவும் இருந்தது. அருகில் உள்ள புல்லூர்களும் சிறிய மிருகங்களும் அதை மிகவும் பயந்து வாழ்ந்தன.

    ஒருநாள், அந்த சிங்கம் நதிக்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்போது அருகில் ஒரு சிறிய குருவி தனது கூட்டில் பாடிக் கொண்டிருந்தது. சிங்கம், அந்த குருவியின் ஒலி இரைச்சலால் குழம்பி, "நீ என்னை எரிச்சலடையச் செய்கிறாய். உன் பாடலை நிறுத்து!" என்று கோபத்துடன் கத்தியது.

    குருவி, "இது என் இயல்பான சுதந்திரம். நான் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை," என்று தைரியமாக பதிலளித்தது. ஆனால் சிங்கம் அது கவனிக்காமல் அந்த கூட்டை கவ்வி வீழ்த்தியது.

    சிறிது நேரத்திற்குப் பிறகு, சிங்கம் தண்ணீருக்குள் இறங்கி சாப்பிட ஒரு மீனை பிடிக்க முயற்சித்தது. அப்போது, தண்ணீருக்குள் உள்ள கூர்மையான கண்ணியில் சிக்கிக் கொண்டது. அது விடுதலையாக பாடுபட்டாலும், அதன் வாழ்வு முடிந்துவிட்டது.

    அதைக் கண்ட குருவி, தூரத்தில் நின்று சொன்னது:
    "அழிவுக்கு அடியோடாய் வரும் தீங்கு செய்பவன், தனது செயலில் தானே சிக்கித் துன்பப்படும்."


    நீதி:

    தீமை செய்யும் மனிதன் நிச்சயமாக தன் செயலால் பாதிக்கப்படுவான். நலமான செயல்களே நமக்கு நலத்தைத் தரும்.

    இதில் உள்ள கருத்து மற்றும் கதையின் அமைப்பு உங்களுக்கு சரியாக இருக்கிறதா? மாற்றங்கள் அல்லது வேறு கதைகள் வேண்டுமா?


  • இன்றைய செய்திகள்

    20.12.2024

    * வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

    * தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    * விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி வழங்கப்பட்டது: நிர்மலா சீதாராமன் தகவல்.

    * புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல்.

    * சர்வதேச தரவரிசை பட்டியல்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    * உலகின் சிறந்த கால்பந்து வீரராக  பிரேசில் வீரர் வினிசியஸ் தேர்வு.

    Today's Headlines

    * The National Energy Conservation Award has been given to Chennai ICF for making energy saving a special feature in the production of Vande Bharat trains.

    * The National Green Tribunal has ordered the Tamil Nadu Pollution Control Board to recover the cost of removing medical waste dumped in Tamil Nadu from the Kerala Pollution Control Board.

    * Vijay Mallya's assets were sold and Rs. 14,000 crore was given to banks: Nirmala Sitharaman.

    * Russia has announced that it has developed a vaccine for cancer. It is reported that this vaccine, which is unknown in the market early next year, will be available free of cost.

    * International rankings: Indian player P.V. Sindhu has moved up one place to 15th in the women's singles category.

    * Brazilian player Vinicius has been selected as the best footballer in the world


    Thank you


    www.waytoshines.com

    திருப்பாச்சேத்தி-கிராமத்தை கடப்போமா



    திருப்பாச்சேத்தி ஊரை பார்க்க போகலாமா.... please click  

    02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

      பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...