பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01-2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: நட்பு ஆராய்தல்
குறள் எண்:799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
பொருள்:கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
பழமொழி :
A bad day never hath a good night.
முதல் கோணல் முற்றும் கோணல்.
இரண்டொழுக்க பண்புகள் :
*தேர்வில் எழுதத் தவறிய வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்வேன்.
*தேர்வு விடைத்தாள்களை திருப்பிப் பார்த்து எனது தவறுகளை திருத்திக் கொள்வேன்.
பொன்மொழி :
பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது.
பொது அறிவு :
1. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?
விடை: ரஷ்யா
2. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?
விடை: தாய்லாந்து
English words & meanings :
Daft – silly; foolish.
குழந்தைத்தனமான,முட்டாள்தனமான.
Dairy - a place on a farm where milk is kept and butter, cheese, etc. are made..பால் பண்ணை
வேளாண்மையும் வாழ்வும் :
வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும். அந்த அளவு வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது.
10-01-25 இன்று
உலகின் மிகப் பழமையான சுரங்க தொடர்ந்து பாதை லண்டனில் (1863) திறக்கப்பட்டது.
முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவர வெர்சாய் ஒப்பந்தம் (1920) கையெழுத்திடப்பட்டது.
நினைவு தினம்
தற்கால சூழலியலின் முன்னோடியான கரோலஸ் லின்னேயஸ் (1778),
மண்இந்தியாவின் பெப்பீசு மற்றும் நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்தரங்கம் பிள்ளை (1761) ஆகியோரின் நினைவு தினம்.
பிறந்த தினங்கள்
இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரருமான முதுபெரும் காங்கிரஸ் தலைவர் காளியண்ணன் (1921),
புகழ் பெற்ற பின்னணி திரைப்பட இசை பாடகர் பத்ம விபூஷன் முனைவர் கே. ஜே. இயேசுதாஸ் (1940),
பிரபல பஞ்சாப் இலக்கியவாதி பத்ம ஸ்ரீ. குருதையாள் சிங் (1933) ஆகியோரின் பிறந்த தினம்.
நீதிக் கதை:
"அறிவும் அகநாணமும்"
ஒரு கிராமத்தில் ராமு என்ற ஒருவன் வாழ்ந்தான். அவன் மிகவும் சாமர்த்தியமானவனாக இருந்தாலும், எளிமையாக ஆட்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதையே தனது வாழ்வாகக் கொண்டிருந்தான்.
ஒருநாள், அவன் மற்றொரு கிராமத்தில் சென்று, தங்க மாலையைப் போலவே தோற்றமளிக்கும் கம்பியை மாலையாக மாற்றி விற்றான். அவனிடம் மாலை வாங்கிய சிலர் அதை உண்மையான தங்கம் என்று நம்பி வாங்கினார்கள்.
அந்தக் கம்பி மாலையை வாங்கியவர் வீட்டுக்குச் சென்று தன் மனைவியிடம் பெருமையாக காட்டினார். ஆனால், அவருடைய மனைவி அதைத் தீயில் வைத்து சுத்தம் செய்ய முயன்றபோது, மாலை உருகி கம்பியாக மாறியது. உண்மையை அறிந்த அவர், மிகவும் கோபமடைந்து, கிராம தலைவரிடம் புகார் செய்தார்.
கிராமத்தலைவர், ராமுவை அழைத்து விசாரிக்க, அவன் தனது அறிவாற்றலால் தனது தவறை மறைக்க முயன்றான். ஆனால், தலைவரின் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ராமு தனது தவறை ஒப்புக் கொண்டான்.
தலைவர் ராமுவிடம், "அறிவு உனக்குண்டு. ஆனால், அதை நல்ல வழிகளில் பயன்படுத்த வேண்டும். தவறான வழியில் சென்றால், அது உன்னை கீழே தள்ளிவிடும். ஆட்களுக்குச் சதி செய்வதை விட்டுவிடு," என்று அறிவுரை கூறினார்.
நீதிசாரம்:
அறிவுடன் அகநாணமும் இணைந்தால் மட்டுமே அது நன்மையை தரும். சதி செய்து சம்பாதிப்பது தற்காலிகமானது; நேர்மையால் மட்டுமே நிலையான வெற்றியை அடையலாம்.
முக்கிய செய்திகள்* 📺
நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாட வலியுறுத்தல்
🗞️ யுஜிசி-யின் புதிய விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்; அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு, பாஜக வெளிநடப்பு!
🗞️ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 3 நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும் என்பதால், மாநகராட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள்!
🗞️ இன்று முதல் 4 நாட்களுக்கு பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்; சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்திற்கு இணைப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு!
🗞️ ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; L&T நிறுவனத் தலைவரின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்!
* Headlines* 📺
An appeal to celebrate the centenary of government schools that have passed one hundred years of existence.
🗞️ The Chief Minister's special resolution against the new rules of the UGC was unanimously passed; Parties including AIADMK, PMK support, BJP walks out!
🗞️ Filing of nominations for the Erode East by-election begins today; As the petition can be filed for only 3 days, elaborate arrangements have been made at the Corporation office!
🗞️ Pongal special buses to operate for 4 days from today; Arrangements for connecting buses from various parts of Chennai to Koyambedu, Kalampakkam, and Madhavaram!
🗞️ Employees should work 90 hours a week; L&T chairman's speech strongly condemned on social media!