பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2025திருக்குறள்
பால் : பொருட்பால் அதிகாரம்:
புல்லறிவாண்மை
குறள் எண்:843
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
பொருள்: அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்
துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்."
பழமொழி :
சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.
Form friendships after due deliberation, having done so do not give place to doubt.
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும்.- ஹெலன் கெல்லர்
பொது அறிவு :
1. மீன்கள் இல்லாத ஆறு எது?
விடை: ஜோர்டான் ஆறு.
2. இந்தியாவில் உயர்கல்வியில் அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை : தமிழ்நாடு
English words & meanings :
Hungry - பசி
Interest. - விருப்பம்
வேளாண்மையும் வாழ்வும் :
மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கலாம்
நீதிக்கதை
எறும்பு
ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் தனது சீடர்களுக்கு துன்பம் வந்தால் எப்படி தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு எறும்பு கதையின் மூலமாக கூறி புரிய வைக்க நினைத்தார்.
"ஒரு நாள் ஓர் எறும்பு சற்று நீளமான உணவுப் பொருளை தன் வாயில் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது.அந்த விரிசலை தாண்டி உணவுப்பொருளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தது.
சிறிது நேரம் கழித்து, அந்த எறும்பு தனது உணவை அந்த விரிசலின் மீது வைத்து,அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலை கடந்து பின்பு தனது உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றது" என்று சீடர்களிடம் கூறினார்.
மேலும் "நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பத்தை பாலமாக வைத்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலே நமது வாழ்வின் துன்பங்களை எளிதில் கடந்து செல்லலாம்"என்று கூறி கதையை முடித்தார்
இன்றைய செய்திகள்
27.02.2025
* மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.
* வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
* அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
* பெண்கள் புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்.
Today's Headlines
- The Tamil Nadu Electricity Distribution Corporation has secured 48th place with a score of 11.90 in the rankings of power distribution companies released by the Ministry of Power.¹
- Passenger ship services between Nagapattinam and Sri Lanka have been suspended for three days due to rough weather and strong winds in the Bay of Bengal.
- A 5.1-magnitude earthquake struck off the coast of Odisha near Puri in the Bay of Bengal.
- US President Donald Trump has announced plans to introduce a 'Golden Card' scheme for immigrants, which can be obtained by paying $5 million.
- India won a thrilling match against the Netherlands in the Women's Pro Hockey League.
- Archer achieved a remarkable feat in the international one-day cricket match, surpassing Anderson's record.
