Songs

Sunday, March 2, 2025

03-03-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -

03-03-2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்: புல்லறிவாண்மை


 குறள் எண்:848


 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 

போஒம் அளவும்ஓர் நோய்.


பொருள்:தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய்,தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்."


பழமொழி :

Well began is half done


நல்ல தொடக்கம் பாதி வெற்றி


இரண்டொழுக்க பண்புகள் :  


 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்


 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்


பொன்மொழி :


தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார் -- பிடல் காஸ்ட்ரோ


பொது அறிவு : 


1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?


விடை: 27


2. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?


விடை: கால்சியம் பாஸ்பேட்


English words & meanings :


 Proud     -  பெருமை


Sad       -   சோகம்


வேளாண்மையும் வாழ்வும் : 


 நோய்க் கட்டுப்பாடு திட்டத்தில் முதன்மையானது, தாவரங்கள் பயிரிடும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, நோயுற்ற அல்லது இறந்து விட்ட தாவரங்களை அகற்றுவதும், தாவரங்களுக்குத் தேவையான அளவு நீர் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றைப் பெற்று ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதுமாகும்



நீதிக்கதை

 கடல்


 கடலில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அன்று  அவர் நினைத்ததை விடவே அதிகமான மீன்கள் கிடைத்தன. எனவே கடற்கரையில் அவர் "இக்கடல் பெரும்  கொடையாளி" என்று எழுதினார்.


 இளைஞர் ஒருவர் கடலில் முத்துக்களை வேட்டையாடிக் கொண்டு கரைக்கு திரும்பினார். அவர் கடற்கரையில், "இந்த கடல் ஒன்றே போதும் நான் மகிழ்ச்சியுடன் வாழ" என்று எழுதினார்.


கடற்கரையில் பந்து விளையாடி கொண்டு இருந்த சிறுவனின் பந்தை, கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த சிறுவன் கடற்கரையில், " இந்த கடல் பெரும் தொல்லை" என்று எழுதினான்.


முதிய பெண்மணி  ஒருவரின் பொருட்களை கடலலை இழுத்துச் சென்று விட்டது. அப்போது அந்த பெண்மணி கடற்கரையில், " இந்த கடல் மிகவும் பேராசை கொண்டது" என்று எழுதினார்.


ஆனால் கடலோ இவர்கள் எழுதியது அனைத்தையும்  அலை ஒன்றை அனுப்பி அழித்துவிட்டு சென்றது.


 மனிதா! இவ்வாறு பிறர் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாதே.இந்த உலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள்.


 உன்னுடைய நட்பும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் எனில்,நீ பிறரின் தவறுகளை  உன் மனதில் இருந்து அழித்துவிடு. வாழ்க்கை சிறக்கும்



இன்றைய செய்திகள் - 03.03.2025


* தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர்.


* தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


* அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.


* உலக செஸ் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்.


* துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் பெற்றார்




Thursday, February 27, 2025

28-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-28.02.2025

திருக்குறள் 

பால் :பொருட்பால்


அதிகாரம்: புல்லறிவாண்மை


 குறள் எண்:845


கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற

 வல்லதூஉம் ஐயம் தரும்.


பொருள்:

அறிவில்லாதவர் தாம் கல்லாத லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்."


பழமொழி :

When one door shuts another open.


ஒரு வாசல் மூட, மறு வாசல் திறக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :  


 *புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது பெரியோரின் அறிவுரைகளை கேட்டு நடப்பேன்


 *பாதிக்கப்பட்டோருக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்


பொன்மொழி :


கற்றவர்களிடம் கற்பதை விட,  கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொழ்..!---+காரல் மார்க்ஸ்


பொது அறிவு : 


1. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது? 


விடை : பிப்ரவரி 28.       


 2. உலகின் மிகப்பெரிய விலங்கு மீட்பு மையத்தினை தொடங்கியுள்ள மாநிலம் எது?    


விடை : பஞ்சாப்


English words & meanings :


Lonely. -  தனிமை,


Loving. -   அன்பான


வேளாண்மையும் வாழ்வும் : 


வேம்பு  கரிம பயன்பாட்டிற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறந்த பூச்சிக் கொல்லி ஆகும்


நீதிக்கதை

 சாவி


ஒரு நாள் சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது, "உன்னை விட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஒரு பூட்டை திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து  விடுகிறாயே எப்படி?


அதற்கு சாவி,"நீ என்னை விட பலசாலி தான் அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் பூட்டை திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.ஆனால், நான் பூட்டின் இதயத்தை 


தொடுகிறேன். என்னுடைய அன்பினால் பூட்டு விரைவில் திறந்து விடுகிறது"என்று பதில் கூறியது.



 நீதி: அன்பே உலகை ஆளும்.



இன்றைய செய்திகள்

28.02.2025

* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

* 25 மருத்துவமனைகளில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

* கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்; ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு.

* பிங்க் பெண்கள் கோப்பை கால்பந்து போட்டி: தென் கொரியா வெற்றி.

Today's Headlines

* The Medical Services Recruitment Board has announced that applications are invited for 425 vacant pharmacist positions in government hospitals.

* Chief Minister Stalin has inaugurated de-addiction treatment and rehabilitation centers in 25 hospitals.

* The Chennai Meteorological Centre has predicted heavy rain in 10 districts, including Kanyakumari and Tirunelveli, today.

* The Central government has spent over ₹400 crore on court cases over the past 10 years, according to government data.

* Hamas has announced its readiness for the next round of ceasefire talks.

* South Korea wins the Pink Women's Cup football tournament






Wednesday, February 26, 2025

27-02-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால் அதிகாரம்:

 புல்லறிவாண்மை 


குறள் எண்:843

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

 செறுவார்க்கும் செய்தல் அரிது.


பொருள்: அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும்

துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்."


பழமொழி :

சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய், செய்தபின் ஐயப்படாதே.  


Form friendships after due deliberation, having done so do not give place to doubt.


இரண்டொழுக்க பண்புகள் :  


  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       


  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :


நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும்.- ஹெலன் கெல்லர்


பொது அறிவு : 


1. மீன்கள் இல்லாத ஆறு எது?  


விடை: ஜோர்டான் ஆறு.          


2. இந்தியாவில் உயர்கல்வியில்  அதிக மாணவர் சேர்க்கை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 


விடை : தமிழ்நாடு  


English words & meanings :


 Hungry -  பசி


Interest. -  விருப்பம்


வேளாண்மையும் வாழ்வும் : 


மேலும், நன்மை பயக்கக் கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கக் கூடிய பூச்சிகள் ஆகியவற்றைத் தங்க வைத்து அவை செயல்பட ஊக்கமளித்து, செடிகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கலாம்


நீதிக்கதை

எறும்பு 


ஒரு ஆசிரமத்தில் குரு ஒருவர் தனது சீடர்களுக்கு துன்பம் வந்தால் எப்படி தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் வைத்திருக்க வேண்டும் என்பதை ஒரு எறும்பு கதையின் மூலமாக  கூறி புரிய வைக்க நினைத்தார்.


 "ஒரு நாள் ஓர் எறும்பு  சற்று நீளமான உணவுப் பொருளை தன் வாயில் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது.அந்த விரிசலை தாண்டி உணவுப்பொருளை எடுத்து செல்ல முடியாமல் தவித்தது.


சிறிது நேரம் கழித்து, அந்த எறும்பு தனது உணவை அந்த விரிசலின் மீது வைத்து,அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலை கடந்து பின்பு தனது உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் சென்றது" என்று சீடர்களிடம் கூறினார்.


மேலும் "நாமும் நம்முடைய வாழ்வில் வரும் துன்பத்தை பாலமாக வைத்து நம் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும். அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நம்மிடம் இருந்தாலே நமது வாழ்வின் துன்பங்களை எளிதில் கடந்து செல்லலாம்"என்று கூறி கதையை முடித்தார்



இன்றைய செய்திகள்

27.02.2025

* மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பிப். 26 முதல் 28 வரை நாகை - இலங்கை  இடையேயான  பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

* அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* பெண்கள் புரோ ஹாக்கி லீக்: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்.

Today's Headlines

- The Tamil Nadu Electricity Distribution Corporation has secured 48th place with a score of 11.90 in the rankings of power distribution companies released by the Ministry of Power.¹

- Passenger ship services between Nagapattinam and Sri Lanka have been suspended for three days due to rough weather and strong winds in the Bay of Bengal.

- A 5.1-magnitude earthquake struck off the coast of Odisha near Puri in the Bay of Bengal.

- US President Donald Trump has announced plans to introduce a 'Golden Card' scheme for immigrants, which can be obtained by paying $5 million.

- India won a thrilling match against the Netherlands in the Women's Pro Hockey League.

- Archer achieved a remarkable feat in the international one-day cricket match, surpassing Anderson's record.


02-06-2025 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.06.2025 திருக்குறள்   பால் :  குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம்: க...